Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th December 2022

Daily Current Affairs

Here we have updated 17th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • பட்டிமன்ற பேச்சாளர் திருவாரூர் இரெ.சண்முக வடிவேல் தமிழ்செம்மல் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை கம்பன் கழகத்தின் “ராதாகிருஷ்ணன் விருது”
    • தமிழாசிரியர் கழகத்தின் “நல்லாசான் விருது”
    • குழந்தை கவிஞர் பேரவையின் “முத்தமிழ் முரசு விருது” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • தமிழகத்தில் மருத்துவ ஆலோசனைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த 104 என்ற எண் புகையிலை பயன்பாடு விதிமீறல் குறித்து புகார் அளிக்கவும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச்சட்டம் – 2003
    • தமிழகத்தில் எலெக்ட்ரானிக் சிகரெட் பயன்பாடு 2018-ல் தடை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் “மினி விளையாட்டு அரங்குகள்” அமைக்கப்படும் என இளைஞர் நலன் &. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • தமிழகத்தின் சட்டப்பேரவை தொகுதிகள்  – 234
    • தமிழகத்தின் மக்களவை தொகுதிகள்  – 39
  • மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு India Today செய்தி நிறுவனம் வெளயிட்டுள்ள “State of Status” பட்டியலில் தமிழகம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
    • 2வது இடம் – இமாச்சலபிரதேசம் (1,312 புள்ளிகள்)
    • 3வது இடம் – கேரளம் (1,263 புள்ளிகள்)
  • TNPSC-யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக அஜய் யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.
    • TNPSC – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்

தேசிய செய்தி

  • ஒடிசா கடற்கைரையை ஒட்டிய அப்துல்கலாம் தீவிலிருந்து அணு ஆயுத்தை தாங்கி செல்லும் “அக்னி-5” பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது..
    • இவ்ஏவுகணை 5000 கிமீ தொலைவு வரை சென்று இல்கை தாக்க கூடிய திறன் பெற்றுள்ளது.
  • செளதாமினி பெத்தே டில்லி பார் கவுன்சிலில் முதல் காது காதுகேளா வழக்கறிஞராக பதிவு செய்தார்.
  • 2017-18-ல் இருந்த பணியாளர் எண்ணிக்கை விகிதம் 46.8%-லிருந்து 2020-21-ல் 52.6%மாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 15-ல் பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு 36வது (கடைசி) “ரஃபேல் போர் விமானம்” இந்தியாவிற்கு வந்ததடைந்தது.

உலகச் செய்தி

  • ஐ.நா.வின் பெண்கள் உரிமைகள் அமைப்பிலிருந்து ஈரான் நாடு நீக்கப்பட்டள்ளது.
  • ஐ.நா. பல்லுயிர் பெருக்க மாநாடு கனடாவின் மான்ட்ரியாஸ் நகரில் நடைபெற்றது..
  • இயற்கையை மீட்டெடுக்கும் 10 திட்டங்களுக்கு ஐ.நா. அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
    • கங்கைநதி புனரமைப்புத் திட்டமும் இதில் அடங்கும்.
  • 1930-களில் உ்க்ரைன் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் சோவியத் யூனியனின் இன அழிப்பு என ஐரோப்பிய நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
    • ஜேசாப் ஸ்டாலினால் 2006-ல் உக்ரைனியர்களை அழிப்பதற்காக பஞ்சம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்தி

  • 2022-ம் ஆண்டுக்கான சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF)  சாம்பியன்களாக ஆண்கள் பிரிவில் ரஃபேல் நடால் (ஸ்பெயின் வீரர்) பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து வீராங்கனை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டள்ளன.
    • ITF – International Tennis ferderation.

Dec 15 Current Affairs | Dec 16 – Current Affairs

Leave a Comment