Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17-18th January 2023

Daily Current Affairs

Here we have updated 17-18th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

 • ஜனவரி 16-ல் ஆதரவற்ற விலங்குகள் பராமரிப்புக்காக “வள்ளலார் பல்லுயர் காப்பகங்கள்” திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • 2 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • ஜனவரி 16-ல் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பொது நூலக இயக்கம், தமிழ்நாடு மற்றும் கல்வியல் பணிகள் கழகம் சார்பில் தமிழகத்தில் முதன் முறையாக நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
  • 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அதில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட 30 வெளிநாடுகளின் அரங்கங்களும் அடங்கும்.
  • “தமிழ் முற்றம்” என்ற பெயரில் தமிழகத்தின் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
  • பிரபலமான திருக்குறளில் 106 திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் உள்பட 106 மொழிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 • சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் முறையினை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இத்திட்டத்தின் படி கட்டக்கழிவுகளை சூரிய வெப்ப ஆற்றலால் வெப்பமடையச் செய்து மறுசுழற்சி முறையில் கான்கீரீட்டாக மாற்ற முடியும். இதனை புளூமெட்டல் மற்றும் மணல் ஆகியவற்றிற்கு பதிலாக பயன்டுத்த முடியும்.
 • அமெரிக்காவிலன் சிகாகோ நகரில் 5வது உவக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.
  • 6வது மாநாடு – ஆசியா
  • 7வது மாநாடு – பிரான்ஸ்

தேசிய செய்தி

 • ரிமோட் வாக்குபதிவு இயந்திரங்களுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு.
  • இயந்திரத்தின் பெயர் – Multi-Constituency Remote Electronic Voting Machine (RVM)
  • தேர்தல் ஆணையம் புலம்பெயர்ந்த இந்திய மக்களுக்காக “பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட்” மற்றும் “எலக்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா”ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது
 • இரண்டு நாள் கூட்டுப்பயிற்சிகாக 309 கடற்படை வீரர்களுடன் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட “ஐஎன்எஸ் தில்லி” கப்பல் இலங்கையை சென்றடைந்து.
  • கப்பலின் நீளம் – 163.2மீ
 • உத்திர பிரதேசம் அமேதியிலுள்ள இந்தோ-ரஷியா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் ரஷியாவின் கலாஷ்கிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பினை தொடங்கியது.
 • மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில் 25 இடங்களில் செயல்பட்டுவரும் யோகா-இயற்கை சிகிச்சை மையங்கள் நிகழாண்டில் 250 இடங்களில் விரிவுபடுத்தப்படுகிறது.
  • இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை 1995ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • 2003ல் ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை (AYUSH) என மாற்றப்பட்டது.
 • மகப்பேற்றின்போது குழந்தை இறக்கும்பட்சத்தில் மனதளவில் பாதிக்குள்ளாகும் பெண் பணியாளர்களுக்கு 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகப்பணி மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
 • இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) முன்னாள் தலைவர் பங்கஜ்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதனால் நாட்டில் சிறுபான்மையினர் பங்களிப்பு குறையும் பொருளாதார நிபுணர் அமர்ததியா சென் தெரிவித்துள்ளார்.
 • உத்திரகாண்ட் சீர்பாக் பகுதியில் “செளர்ய ஸ்தரம்” என்ற பெயரில் போர் வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்தி

 • சீனாவின் மக்கள் தொகை 1961-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சரிவு
 • 2022-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டுளார்

Jan 14 Current Affairs | Jan 15-16 Current Affairs

TNPSC Old Questions

Leave a Comment