Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th April 2025

Daily Current Affairs 

Here we have updated 17th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சட்டப்பேரவை நிகழ்வுகள்

Vetri Study Center Current Affairs - Bharathidhasan

  • விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பத்தில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.
  • குமரி கோமேதகம் என அழைக்கப்படும் பொன்னப்பருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்கப்பட உள்ளது.
  • இசை முரசான நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவினை நாகப்பட்டினத்தில் அரசு விழாவாக கொண்டாப்பட உள்ளது.
  • குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை சிவகங்கை மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாப்பட உள்ளது.
  • நகர்புற உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன முறையில் தேர்ந்தெடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அறன் இல்லம்

  • சென்னை, மதுரையில் திருநங்கையர்களுக்காக அறன் இல்லம் தொடங்கப்பட உள்ளது.

தெலுங்கானா

  • தெலுங்கானா மாநிலமானது சமீபத்தில் வெப்ப அலையை அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வெப்ப அலையை பேரிடராக அறிவித்துள்ள மாநிலம் – தமிழ்நாடு

நீதி வழங்கல்

  • இந்திய நீதி அறிக்கையின்படி இந்தியாவில் நீதி வழங்குவதில் சிறந்த மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது.
  • 2வது இடம் – ஆந்திரா
  • 3வது இடம் – தெலுங்கானா
  • 4வது இடம் – கேரளா
  • 5வது இடம் – தமிழ்நாடு
  • கடைசி இடம் – மேற்கு வங்கம்

தினேஷ் மகேஸ்வரி

Vetri Study Center Current Affairs - Dinesh Maheshwari

  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான தினேஷ்மகேஸ்வரி 23வது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும் வழக்கறிஞர் ஹதேஷ் ஜெயின், பேராசிரியர் டி.பி.வர்மா ஆகியோர் சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இதுவரை 277 அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
  • பதவிக்காலம் – 3 ஆண்டுகள்

தொடர்புடைய செய்திகள்

  • முதல் சட்ட ஆணையம் 1834-ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மக்காலே பிரபு விளங்கினார்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட ஆணையம் 1955-ல் உருவாக்கப்பட்டது. எம்.சி.செடல்வாட் இதன் தலைவராக பதவி வகித்துள்ளார்
  • 22வது வட்ட ஆணையத் தலைவர் – ரிதுராஜ் அவஸ்தி

பி.ஆர்.கவாய்

  • உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்
  • 51வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – சஞ்சீவ் கன்னா

தொடர்புடைய செய்திகள்

உச்சநீதிமன்றம்

  • நீதிபதி நியமனம் – 124(2)
  • ஓய்வு வயது – 65 வயது

உயர்நீதிமன்றம்

  • உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 62

சக்ரா V

  • டிஜிட்டல் மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சிபிஐ அமைப்பானது சக்ரா V நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது.
  • சமீபத்தில் மும்பை, மொராபாத் பகுதிகளில் சக்ரா V நடவடிக்கையின் கீழ் இருவரை கைது செய்துள்ளது.

மீராய்பாய் சானு

Vetri Study Center Current Affairs - Mirabai Chanu

  • மீராய்பாய் சானு IWFன் தடகள ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Links

Leave a Comment