Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th December 2023

Daily Current Affairs

Here we have updated 17th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அயலக தமிழர்களுக்கு விருது

Vetri Study Center Current Affairs - Neighboring Tamil Day

  • ஜனவரி 11, 12-ல் நடைபெற உள்ள 3-ம் அயலக தமிழர் தினம் 2024 விழாவில் இலக்கியம், கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலக தமிழர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
  • இவ்விழாவானது தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.

அடிக்கல் நாட்டல்

Vetri Study Center Current Affairs - Mosque

  • உத்திபிரதேசத்தில் பாபர் மசூதிக்கு மாற்றாக கட்டப்படும் அயோத்தி புதிய மசூதிக்கு புனித மெக்காவின் இமாம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் மசூதிக்கு முகம்மது பின் அப்துல்லா மசூதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அலையாத்தி காடுகள்

Vetri Study Center Current Affairs - Wandering Forests

  • புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அருகே கடல் வளத்தை பாதுகாக்கவும், அலைவேகத்தினை தடுக்கவும் அலையாத்தி காடுகளை உருவாக்குவதற்காக மீன் முள் வடிவில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அலையாத்தி விதைகள் விதைக்கப்பட்டுள்ளன்.

உற்பத்தி துறை முதலீடு

Vetri Study Center Current Affairs - Manufacturing sector investment

  • உற்பத்தி துறை முதலீடு செய்ய சாதகமான இந்திய மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் குஜாரத் முதலிடமு், மகாராஷ்டிரா இரண்டாமிடமும் பிடித்துள்ளது.

புதிய இணையதளம்

Vetri Study Center Current Affairs - CARINGS

  • குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க கேரிங்க்ஸ் (CARINGS) என்னும் புதிய இணையதளமானது தொடங்கப்பட்டுள்ளது

Voice Message-க்கு கட்டுப்பாடு

Vetri Study Center Current Affairs - Voice Message

  • வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் புகைப்படங்களுக்கு இருக்கும் View Once அம்சம், தற்போது View Note-களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் அனுப்பும் பயனர்கள் அனுப்பும் குரல் செய்திகள் ஒருமுறை கேட்க முடியும்.
  • இப்பதிவுகளை ஷேர் செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது.
  • பயனர்களின் தனியுரிமை மற்றும் செய்திகளின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

  • தெலுங்கானா, முலுகுவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • இப்பல்கலைக்கழகமானது தெலுங்கானாவின் பழங்குடியினத்தினைச் சேர்ந்த சம்மக்கா-சரக்கா பெயரில் தொடங்கப்பட உள்ளது.

ஏரிகள் ஆழப்படுத்தல்

  • தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ஆழப்படுத்த உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஜீன் மாத அறிக்கையின்படி 20,150 ஆக்கிரமிப்புகளை அகற்றி 7,559 ஏரிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கேரளம், ஆந்திரம் மாநிலங்களுடன் நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைர வர்த்தக மையம்

Vetri Study Center Current Affairs - Surat Diamond Bourse

  • குஜராத்தின் சூரத் நகரில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) தொடங்கப்பட்டுள்ளது.
  • ரூ.3,200 கோடி மதிப்பில் 32 ஏக்கர் பரப்பளவில் 15 மாடிகளை கொண்டு 9 செவ்வக வடிக கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.
  • இக்கட்டடம் பென்டகன் கட்டத்தை விட பெரியதாகும்.

காசி-தமிழ்ச் சங்கம் 2.0

Vetri Study Center Current Affairs - Kasi Tamil Sangam-2

  • டிசம்பர் 7-ல் தொடங்கவுள்ள காசி-தமிழ்ச் சங்கம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு

Vetri Study Center Current Affairs - women's reservation bill

  • 2024 மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பிறகு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமானது அறிமுகப்படுத்தப்படுமென மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-கொரியா

Vetri Study Center Current Affairs - India-South Korea

  • இந்தியா, கொரியா இணைந்து எலக்ட்ரானிக் மூல தரவு பரிமாற்ற முறைமை (EODES) அமைப்பினை தொடங்கி உள்ளன.
  • EODES (Electronic Origin Data Exchange System) ஆனது விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் சரக்குகளை விரைவாக அகற்ற உருவாக்கப்பட்டுள்ளது.

ஹார்ன்பில் திருவிழா

Vetri Study Center Current Affairs - Hornbill Festival

  • நாகலாந்து மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடியினர் திருவிழாவான ஹார்ன்பில் திருவிழா நடைபெறுகிறது.
  • இத்திருவிழா பண்டிகைகளின் திருவிழாவென அழைக்கப்படுகிறது.
  • இது நாகலாந்தின் மாநில விழாவாகும்.

ஷேக் நவாஃப் அல்-அஹ்மத்

Vetri Study Center Current Affairs - Shaykh Nawaf Al-Ahmad

  • குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் (86) காலமானார்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

Vetri Study Center Current Affairs - Khelo India

  • வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
  • தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.

விசா (நுழைவு இசைவு)

Vetri Study Center Current Affairs - Passport

  • இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா (VISA) தேவையில்லை என ஈரான் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  • மலேசியா, தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து ஈரான் நுழைவு இசைவினை வழங்கியுள்ளது.

ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி – கோலாம்பூர்

Vetri Study Center Current Affairs - Junior Men's World Cup Hockey Tournament

  • இந்திய அணி 4வது இடத்தை பிடித்துள்ளது.
  • ஸ்பெயின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை

Vetri Study Center Current Affairs - Vijay Hazare Trophy

  • ஹரியானா அணியானது ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதன் முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது

 

December 14 Current Affairs | December 15 Current Affairs

Related Links

Leave a Comment