Daily Current Affairs
Here we have updated 17th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பிங்க் ஸ்குவாடு (Pink Squad)
- சென்னை மெட்ரோவில் பிங்க் ஸ்குவாடு (Pink Squad) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்ப்பதற்காக 23 பெண் பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கார்டோசாட்-2
- கார்டோசாட்-2 என்னும் புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள் இந்தியப் பெருங்கடலில் விழ வைக்கப்பட்டுள்ளது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி கழிவுகளால் ஏற்படும் இடர்களை குறைக்க செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் விழ வைக்கப்பட்டுள்ளது.
- 10.01.2007-ல் நகர்ப்புற திட்டமிடல் நடவடிக்கைக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
ஆங்கிலம் கற்றல்
- தமிழகத்தில் மொழிகள் ஆய்வகம் வாயிலாக மாணவர்கள் யாருடைய உதவியுமின்றி தன்னிச்சையாக ஆங்கிலம் கற்க mozhigal.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் குமார் ஜெயின்
- IRCTCஇன் தலைவராக சஞ்சய் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- Indian Railways Catering and Tourism Corporation (IRCTC) – 27.09.1999
லக்சயா சான்றிதழ்
- லக்சயா சான்றிதழ் மத்திய அரசு தமிழ்நாட்டிலுள்ள 55 மருத்துவ மையங்களுக்கு வழங்கியுள்ளது.
- லக்சயா சான்றிதழ் என்பது கர்பிணிகளுக்கான அறுவை அரங்கத்தின் தரம் உயர்த்தும் திட்டமான லக்சயா திட்டத்திற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.
நிலய் அஞ்சாரியா
- குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி நிலய் அஞ்சாரியா கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆன்டி ட்ரோன் சிஸ்டம் (Anti Drone System)
- ஒலி அடிப்படையிலான ஆன்டி ட்ரோன் அமைப்பினை ஜம்மு ஐஐடி உருவாக்கியுள்ளது.
கர்நாடகம்
- கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ தொடங்கப்பட உள்ளது.
ஜெர்மெனி
- 60வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஜெர்மெனியின் நடைபெற்றது.
- சர்வதேச பாதுகாப்பு குறித்து நடைபெற்றுள்ளது.
ஓரே பாலின திருமணம்
- கீரிஸ் நாடானது ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது.
- இதன் மூலம் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் மரபு வழி கிறிஸ்துவ நாடு ஆகும்.
500வது விக்கெட்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.
- அனில் கும்ளேவுக்கு பிறகு 500வது விக்கெட்டினை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
- 500 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் ஆவார்.
FIFA தரவரிசை
- FIFA வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசையில் இந்தியா 117வது இடம் பிடித்துள்ளது.
- அர்ஜென்டினா முதலிடம் பிடித்துள்ளது.
அதிவேக இரட்டை சதம் (டெஸ்ட் கிரிக்கெட்)
- மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 248 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா) சாதனை புரிந்துள்ளார்.
- அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனையாவார்.
உலக எறும்பு திண்ணி தினம் (World Pangolin Day) – பிப் 17
- ஆண்டுதோறும் பிப்ரவரி 3வது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவிய சுற்றுலா பின்னடைவு தினம் (Global Tourism Resilience Day) – பிப் 17
February 15 Current Affairs | February 16 Current Affairs