Daily Current Affairs
Here we have updated 17th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காற்றின் தரம்
- நாட்டிலே 2025ஆம் ஆண்டிற்கான காற்றின் தரக்குறியீட்டில் (AQI) திருநெல்வேலி நகரம் முதன்மையாக திகழ்கிறது.
- 33 புள்ளிகளுடன் சிறந்த காற்றின் தரம் உள்ள நகரமாக உள்ளது.
- 2வது இடம் – நாகர்லகுன் (அருணாச்சலப்பிரதேசம்)
- 3வது இடம் – மடக்கேரி (கர்நாடகா)
- 5வது இடம் – தஞ்சாவூர்
செயற்கை தொழில்நுட்ப மாநாடு
- செயற்கை தொழில்நுட்ப மாநாடானது பிப்ரவரி 2025-ல் பிரான்சில் வைத்து நடைபெற உள்ளது.
மையா சம்மன்
- ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மையா சம்மன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மெளசம் திட்டம்
- வானிலை பற்றி அறிய மெளசம் திட்டம் உதவுகிறது.
- இத்திட்டமானது 14.01.2025-ல் தொடங்கப்பட்டது.
குறைகடத்தி உற்பத்தி ஆலை
- இந்தியாவின் முதல் தனியார் குறைகடத்தி உற்பத்தி ஆலையானது ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் குறைகடத்தி உற்பத்தி ஆலையானது குஜராத்தில் உள்ளது.
- தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் முதல் குறைகடத்தி உற்பத்தி ஆலை தொடங்கப்பட உள்ளது.
மதச்சார்பின்மை நீக்கம்
- வங்கதேச அரசியலமைப்பிலிருந்து செக்குர்லிசம், சோசலிசம், நேஷனலிசம் போன்ற வார்த்தைகள் அண்மையில் நீக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய அரசிலமைப்பில் 1976ஆம் ஆண்டு 42வது சீர்திருத்ததின் கீழ் சமதர்மம், சமயச்சார்பின்னை, ஒருமைப்பாடு என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது.
தருண்தாஸ்
- சிங்கப்பூர் கெளரவ குடிமகன் விருதானது தருண்தாஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி நடைபயணம்
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டார்.
- சுனிதா வில்லியம்ஸ் 2021-ல் அதிக நேரம் விண்வெளி நடந்து சாதனை படைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- கல்பனா சால்வா – விண்வெளிக்கு சென்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனை (1997)
- ராகேஷ் சர்மா – விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் (1984)
சிஜியான் 25
- சீனா நாடானாது சிஜியான் 25 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.
இறக்குமதி தடை
- தாய்லாந்து நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இரட்டை ஆண்டு
- இந்தியாவும், ஸ்பெயினும் இணைந்து கலாச்சாரம், சுற்றுலா மற்றும் AI ஆகியவற்றிற்கு 2026-ஐ இரட்டை ஆண்டாக அறிவித்துள்ளன.
விளம்பர தூதர்
- இந்தியாவிற்கான PUMA நிறுவனத்தின் விளம்பர தூதராக பி.வி. சிந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய தினம்
லோக்பால் தினம் (Lokpal Day) – ஜனவரி 16
- லோக்பால் அறிமுகம் செய்யப்பட்ட நாள் – 16.01.2014