Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th July 2024

Daily Current Affairs

Here we have updated 17th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ராபர்ட் ரவி

Vetri Study Center Current Affairs - Robert Ravi

  • BSNL-ன் புதிய தலைவராக ராபர்ட் ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • BSNL – Bharat Sanchar Nigam Limited – 15.09.2000

நீதிபதி நியமனம்

  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோடீஸ்வர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

  • ஆர்.மகாதேவன் – சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்
  • என்.கோடீஸ்வர் சிங் – ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தவர். மணிப்பூர் மாநிலத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட முதல் நபர்.

குழந்தை தடுப்பூசி 

  • 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத பட்டியிலில் இந்தியா (16 லட்சம் பேர்) 2வது இடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் நைஜீரியா (21லட்சம் பேர்) முதல் இடம் பிடித்துள்ளது.
  • இத்தகவலை உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெஃப் இணைந்து தெரிவித்துள்ளது.

அசைவ உணவு தடை

Vetri Study Center Current Affairs - Meat Banned

  • குஜராத்தில் உள்ள பாலிதானா நகரில் சமண சமய கோவில்கள் அதிகமாக இருப்பதால் அசைவ உணவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  • உலகளவில் அசைவ உணவு தடை செய்த முதல் நகரம் பாலிதானா ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • மனித வளர்ச்சி குறியீட்டில் குஜராத் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
  • குஜராத்தின் வதோதரா நகராட்சி ஆசியாவின் முதல் பசுமை நகராட்சி பத்திரம் ஆகும்.
  • இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் குஜராத்தில் துவங்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு தடை

  • பள்ளிகளுக்கு அருகில் அதிக காஃபின் எனர்ஜி பானங்களை விற்க மகாராஷ்டிரா மாநிலம் தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மகாராஷ்டிரா முதலிடம் இடம் வகிக்கிறது.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய போதைப் பொருள் தடுப்பு விதி மையம்

  • 2047ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லா இந்தியா இலக்கை அடைய தேசிய போதைப் பொருள் தடுப்பு விதி மையம் துவங்கப்பட உள்ளது.

பிரதமர் சிறப்பு கல்லூரி

  • மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் சிறப்பு கல்லூரி (PM College of Excellence) தொடங்கப்பட உள்ளது.
  • இந்த கல்லூரிகள் புதிய கல்வி கொள்கைகளை வைத்து தொடங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் எதிர்ப்பு உதவி எண்

  • இந்தியாவின் முதல் தேசிய கட்டணமில்லா போதைப்பொருள் எதிர்ப்பு உதவி எண் 1933 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தென்கெரியா

Vetri Study Center Current Affairs - World Space Research Conference

  • உலக விண்வெளி ஆராய்ச்சி மாநாடு தென் கொரியாவில் நடைபெற்றுள்ளது.

துபாய்

  • உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட எலக்ட்ரிக் ஆப்ரா துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக நீதி தினம் (International Justice Day) – ஜூலை 17

உலக ஈமோஜி தினம் (World Emoji Day) – ஜூலை 17

 

Related Links

Leave a Comment