Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th October 2023

Daily Current Affairs

Here we have updated 17th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடு

Vetri Study Center Current Affairs - (International Conference on Fisheries Management

  • மாமல்லபுரத்தில் ஒன்றிய மீன்வளத்துறை சார்பில் சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடானது (International Conference on Fisheries Management) இருநாட்கள் நடைபெற உள்ளது
  • மீன்வளத்துறையில் உலகின் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் விவாதிப்பதற்கும் மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் இம் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

ஓங்கில்கள் (டால்பின்கள்)

Vetri Study Center Current Affairs - Dolphin

  • கங்கை நன்னீரில் வாழும் ஓங்கில்கள் (Dolphin) உத்திரபிரதேசத்தின் நீர்வாழ் விலங்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் அருகிவரும் இவ்வினங்களை காக்க மேரி கங்கா, மேரி டால்பின் (Mary Ganga, Mary Dolphin) என்னும் பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளது.
  • இந்தியாவின் நீர்வாழ் விலங்காக 2009-ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • அசாமின் மாநில விலங்காகவும் இருந்து வருகிறது.

சக்ரவத் பயிற்சி 2023

Vetri Study Center Current Affairs - Chakravat

  • கோவாவில் இந்தியாவின் முப்படைகள் மற்றும் அதன் கீழ் உள்ள படைகள் இணைந்து வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியை சக்ரவத் (Chakravat) என்னும் பெயரில் மேற்கொண்டுள்ளன.
  • இப்பயிற்சியில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 8 நாடுகள் (Indian Ocean RIM Association) பங்கேற்றுள்ளன.

ஓரே நாடு ஓரே ஐடி

Vetri Study Center Current Affairs - One Nation, One ID

  • தேசிய கல்வி கொள்ளை 2020ன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்காக ஓரே நாடு ஓரே ஐடி (One Nation, One ID) திட்டதினை மத்திய கல்வி அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
  • இத்திட்டத்தின்படி ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரையிலான ஒவ்வொரு மாணவர்களுக்கும் 12 இலக்க எண் அடங்கிய அபான் (APAAN) அடையாள அட்டையானது வழங்கப்பட உள்ளது.
  • இவ்வட்டை மூலம் மாணவர்களின் மதிப்பெணகள், சாதனைகளை அறிந்து கொள்ள முடியும்.
  • APAAN – Automated Permanent Academic Account Registry

சத்திய ஜித்ரே வாழ்நாள் சாதனை விருது

Vetri Study Center Current Affairs - Sathya Jitre Lifetime Achievement Award - Michael Douglas

  • ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas) -க்கு சத்திய ஜித்ரே வாழ்நாள் சாதனை விருது (Sathya Jitre Lifetime Achievement Award) வழங்கப்பட உள்ளது.
  • நவம்பர் 2023-ல் கோவாவில் நடைபெற உள்ள 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருதானது வழங்கப்பட உள்ளது.

கூட்டு ஆணைய கூட்டம்

Vetri Study Center Current Affairs - 18th Joint Commission Meeting

  • இந்தியா-வியட்நாம் இடையேயான 18வது கூட்டு ஆணைய கூட்டமானது வியட்நாமின் ஹனோயில் நடைபெற்றது.
  • மேலும் இந்தியா-வியட்நாம் இடையே யான 50 ஆண்டு கால ராஜீய உறவு போற்றும் விதமாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

2 + 2 பேச்சுவார்த்தை

Vetri Study Center Current Affairs - Jessica Pegula

  • புது தில்லியில் இந்தியா-பிரிட்டன் இடையே 2+2 பேச்சுவார்த்தையான முதன் முறையாக நடைபெற்றது.
  • 2+2 பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்று வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மருத்துவம், எரிசக்தி போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் (International Day for the Eradication of poverty)Oct 17

Vetri Study Center Current Affairs - International Day for the Eradication of poverty

  • கருப்பொருள்: “Decent work and Social Preotection; putting dignity in practice for all”

 

October 14 Current Affairs | October 15-16 Current Affairs

Leave a Comment