Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th September 2024

Daily Current Affairs

Here we have updated 17th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சமூக நீதி நாள்

Vetri Study Center Current Affairs - Periyar

  • ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2021 முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குழு அமைப்பு

  • உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு மீது விதிக்கப்படும் வரி விகிதங்களை மறு பரிசீலனை செய்ய சாம்ராட் செளத்ரி தலைமையில் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 18% வரி விதிக்கப்பட்டு வருகிறது.

முத்ரா திட்டம்

  • சிறு, குறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்தின் கீழ் அதிகம் பயனடையும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
  • தமிழ்நாடு 3.06 லட்சம் கோடி பெற்று பயனடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முத்ரா திட்டம் – 08.04.2015

முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் தொகை

  • ஷிஷு (Shishu) – 50,000 வரை கடன்
  • கிஷோர் (Kishore) – 50,000 முதல் 5,00,000 வரை கடன்
  • தருண் (Tarun) – 5,00,000 முதல் 20,00,000 வரை கடன்

சுபத்ரா திட்டம்

  • ஒடிசா மாநிலத்தில் 21வயது முதல் 60 வயதுள்ள மகளிருக்கு வருடத்திற்கு ரூ.10,000 வழங்கும் சுபத்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உல்லாஸ் கல்வித் திட்டம்

  • கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் முறையான பள்ளிப் படிப்பைத் தொடராதவர்களுக்காக உல்லாஸ் கல்வித் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தினை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமாறு ஆசிய வளர்ச்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் ஏற்றுமதி

  • சர்வதேச அளவில் வேளாண் ஏற்றுமதியில் தற்போது இந்தியா 17வது இடம் பிடித்துள்ளது.

உற்பத்தி

  • பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.
  • சீனா முதலிடம் பிடித்துள்ளது.

சவுதி அரேபியா

  • சவுதி அரேபியாவில் புலம்பெயர்ந்த வீட்டு பணியார்களுக்காக புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Links

Leave a Comment