Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th February 2023

Daily Current Affairs

Here we have updated 18th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் விதமாக பெண் குழந்தை பெற்ற தாய்மார்கள் 1,000 பேருக்கு சென்னை மேயர் ஆர்.பிரியா பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.
    • பிப்ரவரி 17ல் சென்னையில் நடைபெற்ற “பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி கிடைக்கும் வகையில் தரமான பயிற்சிகள்” அளிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்.
    • நான் முதல்வன் திட்டம் – 2022 மார்ச் 1
    • இணையதளம் – www.nanmudhalvan.tn.gov.in
  • பிப்ரவரி 19ல் பொதுமக்களுக்கு அறிவியலை பரப்பும் வகையில் சென்னையில் “சபாவில் அறிவியல் 2023” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தேசிய செய்தி

  • மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு வில் அம்பு சின்னமும், உத்தவ் தாக்ரே தலைமையிலான் கட்சிக்கு தீப்பந்தம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையம் – 1950 ஜனவரி 25
    • ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம் (2011 முதல்)
  • தில்லி மாநகர மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
    • அரசியலமைப்பு சட்டத்தின் 243R பிரிவு மற்றும் தில்லி மாநகராட்சி சட்டத்தின் (1957) பிரிவு 3(3)ன் படி நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என அறிவிப்பு.
  • ஃகுல்மர்ஃகில் (ஜம்மு-காஷ்மீர்) நடைபெற்ற 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தில்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா நடத்தியுள்ளது.
  • மத்திய அரசின் அடக்கு முறைக்கு கொள்கைக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பலியாக வருகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்” என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது.
  • முறையற்ற வகையில் திட, திரவக் கழிவுகளை மேலாண்மை செய்ததாக தில்லி அரசு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.2,232 கோடியை அபராதமாக செலுத்த தேசிய பசுமைத் தீப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
    • தேசிய பசுமைத் தீப்பாயம் தலைமையம் – டில்லி
    • உருவாக்கப்பட்ட ஆண்டு – 2010
    • கிளைகள் – சென்னை (2012), போபால், புனே, கொல்கத்தா
  • ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிப்ரவரி 22 முதல் 25 வரை பெங்களூரில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
  • சர்தார் வல்லபாய் படேலின் சிலை மீது அவரது வரலாற்றை தமிழ் உள்ளிட மொழிகளில்  ஒளி, ஒலி காட்சி மூலம் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • குஜராத்தின் நர்மதை நதி கரையில் சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
    • 182 மீட்டர் உயரமுள்ளது.
    • 143-வது பிறந்த தினமான 31 அக்டேபார் 2018-ல் இச்சிலை நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
    • படேலின் பிறந்த நாள் “ஒற்றுமை தினமாக” கொண்டாடப்படுகிறது.
  • பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சியில் “வாயுலிங்க்” என்ற கருவி காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தது.
    • வாயுலிங் – தகவல் தொடர்பு சாதனம்
    • இக்கருவியை விமானத்தில் பொருத்தும்போது பல விதமான தகவல்களை எந்த இடையூறம் இன்றி பெற முடியும்.
    • மலைகளுக்கு உயரே பறக்கும் சமயத்தில், ரேடியோ தகவல் தொடர்பு இல்லாதபோது இக்கருவியால் ரேடியோ தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். ஜமார்கள் மூலம் இதன் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்படுத்த முடியாது.
  • இந்தியாவின் சர்வதேச கடல் உணவு கண்காட்சி கொல்கொத்தாவில் நடைபெற்றது.
  • ஆதார் சந்தேகங்களுக்கு பதில் தரும் ஆதார் மித்ரா எனும் செயற்கை நுண்ணறிவு (AI Chatbot)ஐ  இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
    • UIDAI – Unique Identification Authority of India
    • உருவாக்கப்பட்ட ஆண்டு – 29.01.2009
    • ஆதார் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 2016
  • இந்தியாவின் முதல் உறைந்த ஏரி மாராத்தான் லடடாக்கின் பாங்காங் சோ எரியில் நடைபெற உள்ளது.

Feb 16 Current Affairs  |  Feb 17 Current Affairs

Leave a Comment