Daily Current Affairs
Here we have updated 18th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- மார்ச் 17-ல் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க்கனவு” என்ற தலைப்பில் நடைபெற்ற “தமிழ் மரபு பரப்புரை நிழச்சி”யில் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் சுமார் 51.4%பேர் உயர்கல்வி பயில்கிறார்கள்.
- பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப் பெண் திட்டத்தில் (05.09.2022) மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
- “சூர்யவம்சம்” என்ற தன்வரலாற்று நூலுக்காக “சரஸ்வதி சம்மான் விருது” பெற்ற மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
- “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” நான்கு தொகுதிகள் கொண்ட தமிழ், ஆங்கில நூல்களின் மறுபதிப்பை தனியொருவராக தொகுத்துள்ளார்
- மித்ரா பூங்காவிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
- பிஎம் மித்ரா – பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா
- இந்திய ஜவுளி தொழிலை வலுப்படுத்தும் நோக்கில் ஜவுளி அமைச்சகத்தால் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
- மார்ச் 17-ல் தமிழக காவல் துறையில் பெண்காவலர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி “மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு” என்ற பெயரில் சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடைபெற்றது.
- இவ்விழாவில் தமிழக முதல்வரால் “அவள்” என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- 1973ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவலர் உதவி ஆய்வாளர், பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கருணாநிதி பிறப்பித்தார்.
- பெண் காவலர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் கருணாநிதி நினைவாக, கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் வழங்கப்படும். மேலும் “காவல் துறையில் பெண்கள்” எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- சென்னை பெருநகர காவல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் “அவள்” திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேலும் இத்திட்டத்தால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் போலிஸாரின் அணுகுமுறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் “மெகா ஜவுளி பூங்காக்கள்” அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- பிரதமரின் “ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்” (பிஎம் மித்ரா) திட்டத்தின் கீழ் இப்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
- இப்பூங்கா அமைய உள்ள மாநிலங்கள்
- தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம்
- ரூ.4,445 கோடி மதீப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஜவுளி பூஙகாவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
- 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகதிம் 6%மாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகச் செய்தி
- சாட்ஜிபிடிக்கு போட்டியாக “எர்னி” எனும் மென் பொருளை சீனா அறிமுகம் செய்துள்ளது.
விளையாட்டுச் செய்தி
- அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 137 விளையாட்டு வீரர்கள் மொத்தமாக 69 பதக்கங்கள் வென்றனர்.
- 2020ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 25 வரையில் ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான சதுரங்க போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை பி.வி.நந்திகா, ஆர்.வைஷாலி ஆகியோர் பெற்ற்னர்.
- ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை மிட்ஃபீல்டர் ஹார்திக் சிங்கும், சிறந்த வீராங்களை விருதை கோல் கீப்பர் சவீதா புனியாவும் வென்றனர்.
- தமிழக வீரர் கார்த்தி செல்வத்துக்கு அறிமுக ஆட்டத்திலேயே கோலடித்தற்கான விருதும் ரூ.1லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
- 1964 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கயில் தங்கம் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த குருபக்ஸ் சிங்கிற்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
- சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதை உத்தம சிங்கும், சிறந்த வளர்ந்து வரும் வீராங்களை விருதை மும்தாஸ் கானும் பெற்றனர்.