Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th November 2022

Daily Current Affairs

Here we have updated 18th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மாணவர் D.டோமினிக் வால்டர், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் M.குருபிரசாத் ஆகியோர் “நாசாவின் கைப்பேசி செயலி சவால்” என்ற போட்டியில் சிறப்பிடம் பெற்றதற்காக தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றன.
  • ஓய்வு பெற்ற நீதிபதி V.பாரதிதாசன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
    • இதற்கு முன் தலைவர் பதவி வகித்தவர் – ஓய்வு பெற்ற நீதிபதி M.தணிகாசலம்

தேசிய செய்தி

  • வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாச்சார நாகரிக தொடர்பை புதுப்பிக்கும் “காசி-தமிழ்ச் சங்கம்” நிகழ்ச்சியை பிரதமர் நவம்பர் 18ல் தொடங்கி வைக்கிறார்.
    • “காசி-தமிழ்ச் சங்கம்” நிகழ்ச்சி டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது.
  • நவம்பர் 17-ல் காசி-தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து புறப்பட இரயிலினை தமிழக ஆளுநர் R.N.ரவி, மத்திய இணையமைச்சர் L.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற நிகழச்சிக்காக 270-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • நவம்பர் 18-ல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான “விக்ரம்-எஸ்” (Vikram-S) விண்ணி்ல் ஏவப்படுகிறது.
    • இந்திய விண்வெளி தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது.
  • C.V.ஆனந்த போஸ் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுளார்.
    • மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவராக பதியேற்றத்ததை தொடர்ந்து மேற்கு வங்க மாநில ஆளுநராக மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
  • எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக திகழ்கிறது.
    • எஃகு உற்பத்தியில் சீனா (57%) முதலிடம் வகிக்கின்றது.

Nov 16 Current Affairs | Nov 17 – Current Affairs

 

Leave a Comment