Daily Current Affairs
Here we have updated 18-19th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக பட்ஜெட்
- பிப்ரவரி 19-ல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- இதனை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.
- நிதிநிலை அறிக்கையானது தடைகளை தாண்டி, வளர்ச்சி நோக்கி என்னும் தலைப்பில் அளிக்கப்பட உள்ளது.
- மேலும் தமிழக பட்ஜெட்டுக்கான இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
- புதுச்சேரிக்கு பின் தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இத்தடையானது உணவுப் பாதுகாப்புச்சட்டம் 2006 கீழ் விதிக்கப்பட்டுள்ளது.
- பஞ்சு மிட்டாயில் நிறமிக்காக ரோடமைன்-பி என்னும் வேதிப்பொருள் கலப்பதால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
வளரிளம் பருவ கர்ப்பிணிகள்
- கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள 8,462 வளரிளம் பருவ கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- முதலிடம் – தர்மபுரி (3,249)
- இரண்டாமிடம் – கரூர் (1,057)
- மூன்றாமிடம் – வேலூர் (921)
மினி டைடல் பார்க்
- விழுப்புரத்தில் நிறுவப்பட்ட மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது.
- மேலும் வேலூர், காரைக்குடி, நாமக்கல் திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, ஊட்டி, சேலம் போன்ற மாவட்டங்களில் அமைக்கபட உள்ளது.
முறை சாரா முன் பவரு கல்வி
- தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் 2-5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முறை சாரா முன் பவரு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
- இக்கல்வியானது குழந்தைகள் பள்ளி செல்ல தயாராகும் வகையில் அறிவு, உடல், மனதை மேம்படுத்த உதவுகிறது.
ஞானபீட விருது (jnanpith award)
- இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞான பீட விருதினை குல்சார், ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாயு சக்தி 2024
- ராஜஸ்தான் ஜெய்சால்மரின் போக்ரான் பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படை வாயு சக்தி எனும் பெயரில் போர் பயிற்சியை நடத்தியுள்ளது.
நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்
- ஒடிசாவின் முதல்வரான நவீன் பட்நாயக் நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இரண்டாவது இடத்தை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார்.
- மூன்றாவது இடத்தினை அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பிடித்துள்ளார்.
இளம் விஞ்ஞானிகள் திட்டம் (யுவ விஞ்ஞானி கார்யக்கரம்)
- பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தினை இஸ்ரோ (ISRO) தொடங்க உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிடவற்றில் அறிவை ஏற்படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ISRO (Indian Space Research Organisation) – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – 15.08.1969
சாதிவாரி கணக்கெடுப்பு
- இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலமானது சாதிவாரி கண்கெடுப்பினை நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வராக சம்பயி சோரன் தெரிவித்துள்ளார்.
- இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்
- இதன் சின்னம் – வில் அம்பு
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் முதன் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பினை எடுத்த மாநிலம் – பீகார்
- இந்தியாவில் இரண்டாவதாக சாதிவாரிக் கணக்கெடுப்பினை எடுத்த மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்
ஜெய்ஸ்வால் – உலகச்சாதனை
- இந்திய கிரிக்கெட் வீரரான ஜெய்ஸ்வால் முதல் 3 சதங்களிலும் 150 ரன்களை (171, 207, 214) தாண்டிய வீரர் சாதனை படைத்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட் மிக இளைய வயதில் இரட்டை சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இச்சாதனையை 22வயது 49 நாட்களில் இச்சாதனையை புரிந்துள்ளார்.
February 16 Current Affairs | February 17 Current Affairs