Daily Current Affairs
Here we have updated 18th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காலணி உற்பத்தி ஆலை
- தமிழகத்தில் புதிய காலணி உற்பத்தி ஆலை ரூ.1,500 கோடி செலவில் ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் அமைய உள்ளது.
- தமிழக முதல்வர் இதற்கான அடிக்கலை நாட்டினார்.
மாநில விளையாட்டு சட்டம்
- இந்தியாவில் முதன் முறையாக பஞ்சாப்பில் மாநில விளையாட்டுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநில விளையாட்டு ஊக்குவிப்பு சட்டம் – 2024
விசாரத் புடவைத் திருவிழா
- புதுதில்லியில் விசாரத் புடவைத் திருவிழா நடைபெற்றுள்ளது.
SLINEX கடற்படை பயிற்சி
- அண்மையில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான SLINEX கூட்டு கடற்படை பயிற்சியானது நடைபெற்றுள்ளது.
போலவரம் திட்டம்
- கோதாவரி ஆற்றில் போலவரம் திட்டம் கட்டப்படுகிறது.
- இது ஆந்திரப்பிரதேசத்தின் நீர்பாசனத்திற்காக கட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- கோதவரி – தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு
- இதன் நீளம் -1465 கி.மீ.
- இந்நதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
- இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
- தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் வழியாக பாயந்து வங்கக்கடலில் கலக்கிறது.
- இந்த நதியில் கொல்லேறு ஏரி (நன்னீர்) அமைந்துள்ளது.
வல்லபாய் படேல்
- இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய படேல் நினைவு தினம் டிசம்பர் 15-ல் அனுசரிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிக உயரமான சிலை (ஒற்றுமையின் சிலை) குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சோலார் கூட்டணி
- சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) 105வது உறுப்பு நாடாக மால்டோவா இணைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 104வது உறுப்பு நாடு – ஆர்மேனியா
- ISA – International Solar Alliance – 30.11.2015
குடியுரிமை
- அர்ஜென்டினா அதிபரான சேவியர் மிலேய்-க்கு இத்தாலியின் குடியுரிமை வழங்கப்பட்டது.
மயோட் தீவு
- அண்மையில் இந்தியப் பெருங்கடலிலுள்ள மயோட் தீவானது ஷீடாே என்னும் சைக்ளோனால் பாதிக்கப்பட்டுள்ளது.
- இத்தீவானது பிரான்ஸ் கட்டுபாட்டில் உள்ளது.
பிராங்கோயில் பெய்ரூ
- பிரான்சின் புதிய பிரதமராக பிராங்கோயில் பெய்ரூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- இந்திய கிரிக்கெட் வீரரான ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் செளதி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
முக்கிய தினம்
ஓய்வூதியர் தினம் (Pensioners day) – டிசம்பர் 17
சிறுபான்மையினர் உரிமை தினம் (Minorities rights day) – டிசம்பர் 18
சர்வதேச புலம்பெயர்ந்தோர் (International Migrants day) – டிசம்பர் 18
Ca 👏👌🔥