Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th July 2024

Daily Current Affairs

Here we have updated 18th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு தினம்

  • மெட்ராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற 1967 ஜூலை 18-ல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நாள் தமிழ்நாடு தினம் என கொண்டாடப்படுகிறது.

நிலையான வளர்ச்சி இலக்கு

  • நிதிஆயோக் அறிக்கை 2023-24ன் படி தமிழ்நாடு நிலையான வளர்ச்சி இலக்கு (SDG மதிப்பெண்) பட்டியலிலில் 78 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • முதல் இரு இடங்கள் முறையே உத்திரகாண்ட், கேரளா மாநிலங்கள் தலா 79 மதிப்பெண்களுடன் திகழ்கின்றன
  • தமிழ்நாடு நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலிலில் 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது.
  • இந்தியா நிலையான வளர்ச்சி இலக்குகளில் 71 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
  • SDG – Sustainable Development Goals – India Index

SDG மதிப்பெண்

நிதிஆயோக் அறிக்கை 2023-24ன் படி SDG மதிப்பெண் (நிலையான வளர்ச்சி இலக்கு) பட்டியல்

  • 0-49 மதிப்பெண்கள் பெறும் மாநிலங்கள்/மத்திய ஆட்சிப் பகுதிகள்  – லட்சியவாதி (Aspirant)
  • 50-64 மதிப்பெண்கள் பெறுபவை  – செயல்படுகிறவை (Performer)
  • 65-99 மதிப்பெண்கள் பெறுபவை  – முன்னிலையில் இருப்பவை (Front Runner)
  • 100 மதிப்பெண்கள் பெறுபவை  – சாதனையாளர் (Achiever)

இட ஒதுக்கீடு

  • தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்க கொண்டு வந்து சட்ட மசோதாவை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

விவசாய உற்பத்தி

  • இந்தியா விவசாய உற்பத்தியில் 2வது இடமும், விவசாய ஏற்றுமதியில் 8வது இடமும் பிடித்துள்ளது
  • விவசாய உற்பத்தி – சீனா முதலிடம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள்

  • தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
  • மகாதேவன் (தமிழ்நாடு), கோட்டீஸ்வர் சிங் (மணிப்பூர்) ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உச்சநீதிமன்ற விதிகள் சில

  • விதி 124 – உச்சநீதிமன்றம் பற்றியது
  • விதி 125 – நீதிபதிகள் சம்பளம்
  • விதி 126 – பொறுப்பு தலைமை நீதிபதி
  • விதி 127 – தற்கால நீதிபதிகள் நியமனம்
  • விதி 128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் (வழக்குகள் அதிகமாக இருக்கும் போது)
  • விதி 130 – உச்சநீதிமன்றம் செயல்படும் இடங்கள்

அக்னி வீரர்கள்

  • அரசு வேலைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டினை ஹரியானா மாநிலம் வழங்கியுள்ளது.
  • ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சிக்கு முந்தைய நெட்வொர்க் வசதி ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இரயில்வே துறை 100% மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது.

பால் ககாமே

  • ருவாண்டா நாட்டின் அதிபராக பால் ககாமே தேர்வு செய்யப்பட்டள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்

  • பாரீஸ் நடைபெற உள்ள 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 117 விளையாட்டு வீரர்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட உள்ளனர்.
  • இதில் 32 போட்டிகள் 329 பிரிவுகளின் நடத்தப்பட உள்ளன.

முக்கிய தினம்

நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela Day) – ஜூலை 18

  • 1990-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக கேட்போர் தினம் (World Listening Day) – ஜூலை 18

 

Related Links

Leave a Comment