Daily Current Affairs
Here we have updated 18th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இலச்சினை வெளியீடு
- தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் (SDAT) புதிய இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- SDAT – Sports Development Authority of Tamilnadu – 1992
- இலச்சினையிலுள்ள மஞ்சள் – ஆற்றல் மற்றும் ஆர்வத்தை குறிக்கிறது.
- நீலம் – சுதந்திரம் மற்றும் உத்வேகத்தையும் குறிக்கிறது.
- சுற்றியுள்ள வட்டம் – முன்னேற்றத்தை குறிக்கிறது.
செயற்கை தீவுகள்
- புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் செயற்கைத் தீவுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி
- தமிழ்நாடு இந்தியாவில் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள மாநிலமாக திகழ்கிறது.
கர்நாடகம்
- இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா அரசு விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியருக்கு 1 கோடி காப்பிடு வழங்கியுள்ளது.
தற்கொலை ட்ரோன் (Suicide Drone)
- இந்தியாவில் முதன் முறையாக நாக்பூரின் சோலார் தொழிற்சாலை Silent killer எனும் தற்கொலை ட்ரோன் (Suicide Drone) தயாரித்து இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.
- இதன் பெயர் நாகஸ்த்ரா – 1 (Nagastra-1)
இந்திய தேசிய மருத்துவ பராம்பரிய தேசிய நிறுவனம்
- பாரம்பரிய மருத்துவத்தை அறிய உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்திய தேசிய மருத்துவ பராம்பரிய தேசிய நிறுவனத்துடன் (NIIMH) இணைந்துள்ளது.
- WHO – World Health Organization – ஜெனிவா, சுவிட்சர்லாந்து (07.04.1948)
- NIIMH – National Institute of Indian Medical Heritage – ஹைதரபாத் (தெலுங்கானா)
தரங் சக்தி
- 2024 ஆகஸ்டில் இந்தியாவில் பல நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு விமானப்படை கூட்டு பயிற்சிக்கு தரங் சக்தி என பெயரிடப்பட்டுள்ளது.
பிரேர்னா ஸ்தால்
- பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட பிரேர்னா ஸ்தாலை துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்துள்ளார்.
- பிரேர்னா ஸ்தால் – பாராளுமன்றத்தில் வெவ்வேறு இடத்தில் வைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் சிலையானது ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட இடம்
கூட்டு விமானப்படை கூட்டு பயிற்சி
- அமெரிக்காவில் பல நாடுகள் இணைந்து சிவப்பு கொடி (Red Flag) எனும் கூட்டு விமானப்படை கூட்டு பயிற்சியை நடத்தியுள்ளது.
- இந்தியா சாா்பில் முதல் முறையாக ரஃபேல் விமானம் பங்கேற்றுள்ளது.