Daily Current Affairs
Here we have updated 18th March 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.
250 ஆண்டுகளாக செயல்பட்டூ வரும் இந்தியாவின் முதல் தபால் நிலையம்
- 1774-ஆம் ஆண்டு அப்போதைய வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் கொல்கத்தாவில் வைத்த இந்தியாவின் முதல் தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
- 1773-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் வங்கத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் நீயமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் இந்தியாவில் முதல் தபால் நிலையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல்
- அருணாசல பிரதேசத்தை தெற்குபெத் எனக் கூறும் சீனா, அதற்கு ஷாங்னான் எனப் பெயரிட்டுள்ளது.
- இந்திய தலைவர்கள் அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளும் போது சீனா எதிர்ப்பு தெரிவிப்பதும், அதை இந்தியா நிராகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மியுசிக் அகாடமி 98-வது ஆண்டு விருதுகள்
சங்கீத கலாநிதி
- இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி” விருதுக்கு பிரபல கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கர்னாடக இசையை அதன் பாரம்பரிய பெருமை குறையாமல், சமூகத்தின் எளிய, சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். இசை குறித்து பல்வேறு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுகியிருப்பவர்.
சங்கீத கலா ஆச்சார்யா
- மிருதங்க வித்வான் போராசிரியர் பாறசாலா ரவி, கர்னாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் கீதா ராஜா ஆகியோர் “சங்கீத கலா ஆச்சார்யா” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுூள்ளனர்.
டிடிகே விருது
- இசை உலகில் திருவையாறு சகோதரர்கள் எனப்படும் எஸ்.நரசிம்மன், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் 40 ஆண்டூ காலமாக மெலட்டூர் பாகவத மேளா பாரம்பரியத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள். இவர்களும், வயலின் வித்வான் ஹெச்.கே. நரசிம்மமூர்த்தியும் டிடிகே விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
இசை அறிஞர் விருது
- கர்னாடக இசையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் மார்க்ரெட் பாஸ்டின் இந்த ஆண்டூக்கான மியூசிக் அகாடமியின் இசை அறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிருத்திய கலாநீதி விருது
- பிரபல மோகினியாட்ட கலைஞராக அறியப்படும் டாக்டர் நீனா பிரசாத், மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான நிருத்திய கலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சங்கீதகலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டூள்ள டி.எம்.கிருஷ்ணா, 2024 டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1-ம் CHF வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு கருத்தரங்களுக்கு தலைமை தாங்குவார்.
- 2025 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் மியூசிக் அகாடமியின் 18-வது ஆண்டு நாட்டிய விழாவில் நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும்.