Daily Current Affairs
Here we have updated 18th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பயணிகள் விமான சேவை
- உதான் திட்டத்தின் கீழ் சேலத்திலிருந்து மீண்டும் பயணிகள் விமான சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 29-ல் பெங்களூரு-சேலம்-ஹைதரபாத் விமான சேவை, சேலம்-சென்னை விமான சேவையானது இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் தொடங்கப்பட உள்ளது.
- உதான் திட்டமானது 21.10.2016-ல் அனைத்து மக்களும் குறைந்த செலவில் விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்த தொடங்கப்பட்ட திட்டமாகும்.
புதிய நீதிபதிகள்
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன.
- இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான கங்கா புர்வாலா பதவிப் பிரமாணம் செய்தார்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூர்
- மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சித்தார்த் மிருதுள் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொலீஜியம் அமைப்பில் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டும், உறுப்பினர்களாக நீதிபதிகள் எஸ்.கே.கெளல், சஞ்சீவ் கன்னா ஆகியோர் உள்ளனர்
69வது தேசிய திரைப்பட விருதுகள்
- 2021 தாதா சாகிப் பால்கே விருதானது நடிகை வகிதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை பெறும் 8வது பெண் ஆவார்.
சிறந்த நடிகர் | அல்லு அர்ஜுன் (புஷ்பா) | |
சிறந்த நடிகை | கிருதி சனோன் (மிமி) | |
ஆலியாபட் (கங்குபாய் காடியா வாடி) | ||
சிறந்த திரைப்படம் | ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் (இயக்குநர் – மாதவன்) | |
சிறந்த தமிழ் திரைப்படம் | கடைசி விவசாயி (இயக்குநர் மணிகண்டன்) | |
சிறந்த தேசிய விருது | கருவறை குறும்படம் (ஸ்ரீகாந்த் தேவா) |
ககன்யான் விண்கலம்
- அக்டோபர் 21-ல் ஆளில்லாத ககன்யான் விண்கலனானது டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- இவ்விண்கலமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஸ் தைவான் விண்வெளி ஆய்வகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
காந்தி சிலை
- வியட்நாம் ஹோ சி மின் நகரில் காந்தி சிலையானது திறக்கப்பட்டுள்ளது.
விமானி உரிமம்
- வணிக விமானி உரிமத்தின் செல்லத்தக்க காலமானது 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்ந்தப்பட்டுள்ளது.
- இதற்காக மத்திய விமானப்படை போக்குவரத்து அமைச்சகமானது விமானப் போக்குவரத்து விதி 1937-ல் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
ஐசிசி விருதுகள் 2023
- செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சிறந்த வீராங்கனையாக சாமரி அத்தபத்து (இலங்கை) தேர்வு செய்யப்ட்டுள்ளார்.
அஷுதோஷ் சர்மா
- இரயில்வே அணியை சார்ந்த அசுதோஷ் சர்மா டி20 போட்டியில் 11 பந்தில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
- இந்திய அளவில் 2007 யுவராஜ் 12 பந்துகளில் அரைசதம் அடித்தது சாதனையாக இருந்து வந்தது.
- சர்வதேச அளவில் நேபாளத்தின் திபேந்திரா 9 பந்துகளின் சதம் அடித்தது சாதனையாக இருந்து வருகிறது