Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th January 2023

Daily Current Affairs

Here we have updated 19th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
  • வீட்டு மனைகளுக்கான உள்பிரிவுகளை ஒட்டு மொத்தமாக உருவாக்கி பட்டா மாறுதல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய மென்பொருளை முதல்வர் தொடக்கி வைத்தார்.
  • தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ரூ.3கோடி தமிழக அரசால் மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய செய்தி

  • திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் பேரவை தேர்தல் அறிவிப்பு
    • திரிபுரா – பிப்ரவரி 16
    • நாகலாந்து, மேகாலயா – பிப்ரவரி 27
  • தில்லியில் கடமை (கரதவ்ய) பாதையில் நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் 9 ரஃபேல் விமானங்கள் உள்படி 50 விமானங்கள் பங்கேற்கும் இந்திய விமானப்படை மூத்த அதிகாரி அறிவித்துள்ளார்.
    • இந்திய கடற்படையில் உளவுப் பணியில் 42 ஆண்டுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஐஎல்-38 விமானம் காட்சிபடுத்தப்படுகிறது.
  • லாரி ஓட்டுநர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்ரி தெரிவித்துள்ளார்.
  • இந்தியா சர்வதேச நெருக்கடியால் கடந்த டிசம்பர் மாதத்தில் 12.2% ஏற்றுமதி சரிவு-னை சந்தித்துள்ளது.
    • வர்த்தக பற்றாக்குறை ரூ.2,367கோடி டாலராக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் முதல் அரசியலமைப்பு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக கேரளாவின் கொல்லம் மாவட்டம் தேர்வு.
  • ஜனவரி 16-20 வரை இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான கூட்டு கடற்படை பயிற்சியானவருணா-2023″ன் 21வது பதிப்பு மேற்கு கடல் பகுதியில் நடைபெறகிறது.

உலகச் செய்தி

  • மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனம் 10,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
  • ஜனவரி 29-ல் ஐ.நா. பொதுச் சபையின் 77-வது அமர்வின் தலைவரான சபா கொரோசி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  • சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு-2023 நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

  • தேசிய பேரிடர் மீட்புப் படை எழுச்சி தினம்

Jan 15-16 Current Affairs | Jan 17-18 Current Affairs

Leave a Comment