Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th November 2022

Daily Current Affairs

Here we have updated 19th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • டிசம்பர்21-ல் அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள தமிழ் இசைச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் வழங்க உள்ள தமிழ் இசைசங்க விருதுகள் அறிவிப்பு.
    • இசைக்கலைஞர் M.செளமியாஇசைப் பேரறிஞர் விருது
    • திருமுறை இசைத் துறையில் புகழ் பெற்ற ஒதுவார் பா.சற்குணம்பண் இசைப் பேரறிஞர் விருது

தேசிய செய்தி

  • நவம்பர் 19-ல் அருணாசல பிரேசத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • இவ்விமான நிலையம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஹோலாேங்கி பகுதியில் “டானிபோலோ” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரூ.645 கோடி செலவில் அமைக்கபட்டுள்ளது.
    • இந்நிகழ்ச்சியின் போது காமேங் மாவட்டதில் அமைக்கப்பட்டுள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட காமேங் நீர் மின்நிலையத்தையும் தொடங்கி வைக்கிறார்
  • நவம்பர் 18 முதல் 19வரை புதுதில்லியில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் “பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை” மாநாட்டை நடத்துகிறது.
    • கருப்பொருள் – “பயங்கரவாத நிதியுதவி மற்றும் பயங்கரவாதத்தின் உலகளாவிய போக்குகள்”
  • நவம்பர் 17-ல் இராசயனங்களின் முழு வாழ்க்கை சுழற்சியின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான இந்திய கெமிக்கல் கவுன்சில் 4வது இந்திய கெமிக்கல் கவுன்சில் நிலைத்தன்மை மாநாட்டை புதுதில்லியில்  இரசாயனங்கள் & பெட்ரோ கெமிக்கல் செயலர் அருண் பரோக் தொடங்கி வைத்தார்.
    • கருப்பொருள் – “சமூகத்திற்கான குழு அறைகள் – ESG, கார்பன் நடுநிலைமை, செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் பசுமையான தீர்வுகள்”
  • TRAI நிறுவனம் (Telcom Regulatory Authority of India) புதிய காலர் ஐடென்டிட்டி சேவையை சில வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
    • இந்திய விண்வெளி தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது.
  • தாய்லாந்தின் பட்டாய நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுபாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துவத்துக்கான விருது -2022ஐ இந்தியா பெற்றுள்ளது.
    • இவ்விருதினை பெற்ற முதல் நாடு இந்தியாவாகும்.
    •  குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்கள் விகிதம் 2015-16 வரை 66%மாக இருந்து 2019-21 வரை 75%மாக உயர்ந்துள்ளது.
    • 2030-ம் ஆண்டில் 75%மாக இலக்கு நிர்ணயிக்கப்ட்டுள்ளது

உலக செய்தி

  • நவம்பர் 18-ல் தேசிய அருங்காட்சியகம்-புது தில்லி மற்றும் கோல்டிங் மியூசியம்-டென்மார்க் இணைந்து 2023 மார்ச்-ல் “டென்மார்க் மற்றும் இந்தியாவிலிருந்து வெள்ளி பொக்கிஷங்கள்” என்ற கூட்டுக் கண்காட்சியை நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • நவம்பர் 17-ல் ஐந்தாவது சைபர் கொள்கை உரையாடலை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து புதுதில்லியில் நடத்தியுள்ளது.
  • “மிட்நைட்” என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் எர் டாக்சியை அமெரிக்காவினை சேர்ந்த ஆர்ச்சர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • 2025-ல் இதன் சேவை தொடங்கும் என கூறப்படுகிறது.
  • சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவராக சுவிட்சர்லாந்தின் கியானி இன்ஃபான்டினோ மீண்டும் தேர்வானார்.

முக்கிய தினம்

  • 242வது கார்பஸ் பொறியாளர் தினம்
  • உலக கழிப்பறை தினம்
    • கருப்பொருள் – “Making the Invisible Visible”

Nov 17 Current Affairs | Nov 18 – Current Affairs

 

Leave a Comment