Daily Current Affairs
Here we have updated 19 & 20th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- பிப்ரவரி 19-ல் இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் 150 செயற்கைகோளுடன் மாமல்புரத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- தி.மு.க.வின் முதல் பெண் அமைச்சரும், முன்னாள் அமைச்சருமான, சத்தியவாணிமுத்து-வின் நூற்றாண்டுவிழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
- சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட துய்மையான கடற்கரைகள் பட்டியிலில் நீலாங்கரை, அக்கரை முதலிடம் பிடித்துள்ளன. பெசன்ட் நகர் இரண்டவாது இடத்தையும், மெரினா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
- “சிங்காரச் சென்னை 2.0” திட்டதின் கீழ் சென்னையில் உள்ள கடற்கரை திட்டத்தி்ன் கீழ் சென்னையில் உள்ள கடற்கரைகளை தூய்மையாகவும், அழகானதாகவும் மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
- பிப்ரவரி 13-17 வரை இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கல்வியறிவு விழப்புணர்வு வாரத்தை கடைபிடித்துள்ளது.
- “சிற்பி” திட்டதின் கீழ் அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவிகளை ரயில் மூலம் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதற்காக சென்னை காவல்துறைக்கு உலக சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- இதற்கு “வேர்ல்டு யூனியன் ரெக்கார்ட்ஸ்” அமைப்பு உலகச் சான்றிதழை வழங்கியுள்ளது.
- SIRPI – Stents in Responsible Police Initiatives (14 Sep 2022)
- தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதரின் 169 வது பிறந்த நாள் விழா சென்னை மாநிலக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
- அவரது காலம் 19.02.1855 – 28.04.1942
- தமிழகத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரந்துள்ளதால், நிகழாண்டு கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுபாடு இருக்காது என தெரிவிக்கப்பட்டள்ளது.
- உலகத்தில் நிலத்தடி நீர் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்.
- இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்படுத்தவதில் தமிழகம் முதலிடம்
- தகவல் ஆணையர் காலிபணியிடங்களை நிரப்புவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கும் தகவல் ஆணையர்களுக்கு ஆளுநர் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைப்பார்.
- மின்வாகன உற்பத்தியில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளையும், 1.50 லட்சம் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதற்காக தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023-ஐ தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.
- ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019ல் வெளியிட்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்தி
- கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிக அளவாக 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
- இதில் தமிழகம் இரண்டாம் இடம் வகித்துள்ளது.
- தெலுங்கானா, தில்லி ஆகிய மாநிலங்கள் முதலிடம்
- கடந்த ஆண்டுகளை விட 27% அதிகம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (NOTTO) மூலம் “அறிவியல் உரையாடல் 2023″ தில்லியில் நடைபெற்றது.
- NOTTO – National Organ and Tissue Transplant Organization
- இம்மாநாட்டின் தகவல்படி உயிருடன் 12,791 உடல் உறுப்பு தானம் அளித்துள்ளன. இதில் தில்லி முதலிடமும், தமிழகம் இரண்டவாது இடமும் பிடித்துள்ளன்.
- இறந்த 904 பேரின் உடல் உறுப்பு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 2,765 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வழங்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவும், தமிழகமும் அடுத்த இடம் பிடித்துள்ளன
- பின் தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்காவிட்டால், நாட்டில் பிராந்திய ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் என்று பீகார் நிதியமைச்சர் விஜய்குமார் செளதரி தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது கடந்த 1967-ம் ஆண்டு அறிமுகம் ப்படுத்தப்பட்டது.
- அஸ்ஸாம், நாகலாந்து, ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், சிக்கிம், திரிபுரா, அருணாசல பிரதேசம், மிஸோரம், உத்திரகண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளன.
- கடைசியாக சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் – தெலுங்கானா
- பிப்ரவரி 24, 25-ல் பெங்களூரில் ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சரகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற உள்ளன.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
- மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மன்னர் சிவாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள நார்ஹே-அ்பேகான் பகுதியில் அவரின் நினைவாக சிவசிருஷ்டி என்ற பெயரில் கருத்தியல் பூங்கா அமையவுள்ளது.
- பிறந்த தினம் – 19.02.1630
- இறந்த தினம் – 03.04.1680
- சிவாஜி மன்னரால் கட்டப்பட்ட கோயில் – சப்தகோடேஸ்வர்
- பிப்ரவரி 22 முதல் 25 வரை பெங்களூரில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
- லடாக்கில் 4.1கி.மீ நீளம் கொண்ட ஷின்குன் லா சுரங்கப் பாதை கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு ரூ.1681.51 கோடி நிதி ஒதுக்கீடு.
- மத்திய பிரதேசத்தின் குனா தேசிய பூங்காவிற்கு 12 சிவிங்கிப்புலிகள் (சீட்டா) தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருகை.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஐ.நா.சபை சார்பில் 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது