Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19 & 20th March 2023

Daily Current Affairs

Here we have updated 19 & 20th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப்-இல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியத்திடம் ஐ.சி.எஃப் ஒப்படைத்தது.
    • சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதன் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் “ரயில் 18” என்ற நவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. அதி வேகத்தில் செல்லும் இந்த இரயிலுக்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்பட்டது.
  • இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
    1. சென்னை – மைசூரு
    2. தில்லி – வாரணாசி
    3. தில்லி – காத்ரா
    4. காந்திநகர் – மும்பை
    5. தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
    6. பிலாஸ்பூர் – நாக்பூர்
    7. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
    8. ஹவுரா – நியூ ஜல்பைகுரி
    9. செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
    10. சோலாப்பூர் –  மும்மை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
  • பிப்ரவரி மாதத்திற்கான வானவில் மன்றம் போட்டிகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளன.
    • உருவாக்கப்பட்ட ஆண்டு 28.10.2022
    • “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதை அடிப்படை முழக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

தேசிய செய்தி

  • குஜராத்தில் ஏப்ரல் 17-26வரை செளராஷ்டிரம்-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • காசி தமிழ் சங்கமத்தை அடுத்து இரண்டாவது நிகழ்ச்சியாக செளராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது.
    • 2022 நவம்பர் 18 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாச்சார நாகரிக தொடர்பை புதுப்பிக்கும் “காசி-தமிழ்ச் சங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சரக்கு-சேவை வரி (ஐிஎஸ்டி) ஏய்ப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைககளைத்  தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு.
    • மறைமுக வரி நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவிலுள்ள மயூர்பஞ்சி, லடாக் ஆகியன டைம் இதழ் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டின் உலகின் மிகசிறந்த 50 இடங்களுக்கு இடம்பெற்றுள்ளது.
  • ரூ.377கோடி செலவில் இந்தியா, வங்கதேசம் இடையலான எல்லை கடந்த முதல் எரிசக்தி குழாய் அமைப்ப 131.5 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழாய் நுமலிகார் எண்ணெய் சத்திகரிப்ப ஆலை முனையம் (அஸ்லாம்) முதல் வங்கதேசத்தின் பார்பதிபூர் பெட்ரோலிய கழக பணிமனை வரை செல்கிறது.
  • சத்திஸ்கர் மாநில அரசு புதிய நக்ஸல் ஒழிப்பு கொள்கையை வகுத்துள்ளது.
    • இத்திட்டத்தின்படி சரணடையும் நக்ஸல்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி
    • நக்ஸல் ஒருவர் பற்றி தகவல் அளித்தால் ரூ.5லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.
  • குஜராத் மாநிலம் ஜீனாகத்தில் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டியின் “கிஸான் பவன்” கட்டத்தை அமித்ஷா திறந்து வைத்தார்.
  • ட்விட்டர், முகநூல் வழியாக நிதிநிலை அறிக்கை விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • உலக அளவில் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியயில் இந்தியா 28%வுடன் முதலிடம்.

விளையாட்டுச் செய்தி

  • மார்ச் 19-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடைபந்தய சாம்பியன் போட்டியில் 20 கிமீ பந்தயத்தில் இந்தியாவின் விகாஷ் சிங் 1.20.05 மணிநேரத்தில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பெற்றார்.
    • பரம்ஜித் சிங் 1.20.08 மணி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பெற்றார்.
  • இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி-டபிள்யுடிஏ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவல் இந்தியாவின் ரோஹன் போபன்னா – ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • மகளிர் இரட்டையர் பிரிவில் கிரஜ்சிகோவா-சினியகோவா இணை பட்டம் வென்றது.

முக்கிய தினம்

  • உலக சிட்டுக்குருவிகள் தினம் (மார்ச் – 20).

Mar 17 Current Affairs  |  Mar 18 Current Affairs

Leave a Comment