Daily Current Affairs
Here we have updated 19th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மக்களுடன் முதல்வர் திட்டம்
- டிசம்பர் 18-ல் கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
- தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் விதமாக இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டல்
- கோயம்புத்தூரில் அமையவுள்ள செம்மொழி பூங்காவிற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
- இப்பூங்காவினை தொடங்க முதற்கட்டமாக ரூ. 133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2010 உலக தமிழ் மாநாடு நடைபெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய தியான மையம்
- உத்திரபிரதேசம், வாரணாசி, உமராஹா பகுதியில் உலகின் மிகப்பெரிய தியான மையமானது திறக்கப்பட்டள்ளது.
- ஏழு மாடிகளை கொண்டுள்ள இம்மையத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியம்.
- இத்தியான மைத்திற்கு ஸ்வர்வேத மகாமந்திர் என பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சூரத் நகரில் (குஜராத்) உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) தொடங்கப்பட்டுள்ளது.
பாசினி
- வாரணாசியில் தொடங்கிய காசி-தமிழ் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்க்க பாசினி என்னும் இந்திய மொழி AI கருவி பயன்படுத்தப்பட்டது.
சமர் வான் பாதுகாப்பு அமைப்பு
- சமர் (SAMAR) வான் பாதுகாப்பு ஏவுகணை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) அறிவித்துள்ளது.
- சூர்யலங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்ற அஸ்ட்ரா சக்தி-2023 பயிற்சியின் போது பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- வானில் 25 கி.மீ. தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி ஆகாஷ் ஏவுகணை புதிய சாதனை படைத்துள்ளது.
மக்களவை – சிறப்பு பார்வையாளர்
- இலங்கை நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலையிலான குழு மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர்.
ஹைதராபாத்
- 2022-ல் உணவு கலப்படம் தொடர்பான வழக்குகளில் முதலிடத்தினை ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத் நகரம் பிடித்துள்ளது.
- தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
தபால் மசோதா
- சர்சைக்குரிய தபால் அலுவலக மசோதாவனாது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 125 ஆண்டுகள் பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்திற்கு பதிலாக இம் மசோதாவானது நாடளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்துது
தொலைத்தொடர்பு மசோதா
- நாட்டில் அவரசர நிலைய ஏற்படும் போது தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மசோதாவானது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஃபார்முலா 2000 பந்தயம்
- சென்னையில் மெட்ராஸ் ரேசிங் சர்க்யூட் ஓடுதளத்தில் நடைபெற்ற ஃபார்முலா 2000 பந்தயத்தில் சந்தீப் குமார் (தமிழ்நாடு) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- இவர் மூன்றாவது முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கோவா விடுதலை தினம் (International Migrants Day) – Dec 19
- 1961 டிசம்பர் 19-ல் கோவாவானது போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுதலை பெற்றது.
- 56வது சட்டத்திருத்தம் 1989 மூலம் கோவா இந்தியாவின் 25வது மாநிலமாக உருவாகியது.
December 17 Current Affairs | December 18 Current Affairs