Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th December 2024

Daily Current Affairs

Here we have updated 19th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதுமைப்பெண் திட்டம்

  • உயர் கல்வியில் சேரும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
  • புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமான இத்திட்டமானது டிசம்பர் 30-ல் தூத்துக்குடியில் வைத்து தொடங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • புதுமைப்பெண் திட்டம் – 05.09.2022 (சென்னை)
  • புதுமைப்பெண் திட்ட இரண்டாம் கட்டம் – திருவள்ளூர்
  • தமிழ்புதல்வவன் திட்டம் – 09.08.2024 (கோவை)

விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2024

  • எழுத்தாளர் இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 34வது வியாஸ் சம்மான் விருது – சூர்யபாலா
  • ஜாம்செட்ஜி டாடா விருது 2024 – கிரண் மசூம்தார் ஷா

சாகித்ய அகாடமி விருது 2024

Vetri Study Center Current Affairs - A.Ira.Venkatachalapathy

  • ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சிய.யும் 1908 நூலுக்காக சாகித்ய அகாடமி விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.
  • இலக்கியத்திற்காக கொடுக்கப்படும் 2வது உயரிய விருது இதுவாகும்.
  • இலக்கியத்திற்காக கொடுக்கப்படும் முதலாவது உயரிய விருது – ஞானபீட விருது

தொடர்புடைய செய்திகள்

  • சாகித்ய அகாடமி விருது உருவாக்கப்பட்ட ஆண்டு – 1954
  • சாகித்ய அகாடமி விருது முதன் முதலில் கொடுக்கப்பட்ட ஆண்டு – 1955

ஒரே நாடு ஒரே தேர்தல்

  • ஒரே நாடு ஒரே தேர்தலானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 129வது திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

குளோபல் பிளாஸ்டிக் ஒப்பந்தம்

  • அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை குழு (INC)-வானது பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கொண்டுவர ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • இதற்கான குளோபல் பிளாஸ்டிக் ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் நடைபெற்றது.
  • இக்குழுவானது 170 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • INC – Intergovernmental Negotiation Committee

இந்தூர்

  • பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக மத்தியபிரதேசத்தின் இந்தூரில் பிச்சை போடுவதை குற்றமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் தூய்மை நகரம் – இந்தூர்

சர்வதேச வன கண்காட்சி

  • 10வது சர்வதேச வன கண்காட்சி மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • போபால் விஷ வாயு கசிவு – 1984

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025

  • 2025ஆம் ஆண்டிற்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடைபெற உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

  • சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிகெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டி – 156 விக்கெட்கள்
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – 537 விக்கெட்கள்
  • டி20 கிரிக்கெட் போட்டி – 72 விக்கெட்கள்
  • 37முறை 5 விக்கெட்டுகளையும், 8முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
  • டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 5வது இடத்தையும், டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3வது இடத்தையும் பெற்றுள்ளார்.

FIFA விருது

Vetri Study Center Current Affairs - Vinicius Jr

  • சிறந்த வீரர் – வினிசியஸ் ஜூனியர் (பிரேசில்)
  • சிறந்த வீராங்கனை -அயிட்டான போன்மதி (ஸ்பெயின்)
  • சிறந்த கோல் கீப்பர் – எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா)
  • சிறந்த கோல் அடித்த வீரர் – அலெஜான்ட்ரோ கர்னாச்சோ

தேசிய விளையாட்டு போட்டி

  • 38வது தேசிய விளையாட்டு போட்டியானது உத்திரகாண்டின் டேராடூனில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

கோவா விடுதலை தினம் (Goa Liberation day) – டிசம்பர் 19

  • கோவிற்கு விடுதலை 1961 டிசம்பர் 19-ல் கிடைத்துள்ளது.
  • 1987 மே 30-ல் 56வது சட்டத்திருத்தத்தின்படி கோவா இந்தியாவின் 27வது மாநிலமாக மாறியது.

Related Links

Leave a Comment