Daily Current Affairs
Here we have updated 19th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அகழாய்வுப் பணிகள்
- தமிழக முதல்வர் கீழடி உள்பட 8 இடங்களில் 2024ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
அகழாய்வு நடத்தப்பட உள்ள இடங்கள்
- திருமலாபுரம் – தென்காசி
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- வெம்பக்கோட்டை – விருதுநகர்
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- கீழடி (ம) கொந்தகை – சிவகங்கை
- சென்னனூர் – கிருஷ்ணகிரி
- மரூங்கூர் – கடலூர்
- கொங்கல் நகரம் – திருப்பூர்
கே.சந்துரு குழு
- ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
- பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளை உருவாக்கும் வன்முறைகளை தடுக்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும் வழிமுறை வகுத்திட ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- ராம்நாத் கோவிந்த் குழு – ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றியது
- ராஜீவ் கெளபா குழு – பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது.
நூல் வெளியீடு
- இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட இராமானுஜர் என்னும் நூலினை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
- முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தொலைகாட்சி தொடரினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டது.
புதிய இணையதளம்
- தமிழக அரசின் சார்பில் குழந்தைகளின் நலனை காக்க www.pocsoportal.tn.gov.in என் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.
- குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசு இலவச செயற்கை கருத்தரித்தல் மையம்
- நாட்டில் முதன் முறையாக அரசு இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள்
- இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை ரத்து செய்து மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியுள்ளது.
அச்சட்டங்கள்
- பாரதிய நியாயா சன்ஹிதா (BNS)
- பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்கிதா (BNSS)
- பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (BSA)
இச்சட்டங்கள் அரசியலமைப்பு 348-வது பிரிவை மீறுவதாகவும், சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டதாலும் மாநில அரசுகள் இதனை எதிர்க்கின்றன.
சமபாலின திருமணம்
- தாய்லாந்து நாடாளுமன்றம் சமபாலின (தன்பாலின) திருமணத்திற்கான சட்ட அங்கீகார வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
- சமபாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கும் முதல் தெற்காசிய நாடு
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் சம பாலினத்தவர் மற்றும் இனக்கலப்பு திருமணங்களுக்கு சட்டபாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காந்தி சாகர் வனவிலங்கு சரணலாயம்
- மத்திய பிரதேசத்திலுள்ள குணா தேசிய பூங்காவிலுள்ள சில சிவிங்கி புலிகள் காந்தி சாகர் வனவிலங்கு சரணலாயத்திற்கு மாற்றப்பட உள்ளது.
உலக அமைதி குறியீடு 2024
- உலக அமைதி குறியீட்டில் இந்தியா 116வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – ஐஸ்லாந்து
- இரண்டாமிடம் – அயர்லாந்து
- கடைசி இடம் – ஏமன்
சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- Tiger Anthem என்பதை உருவாக்கியதற்கா சுப்பையா நல்லமுத்துவிற்கு சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
- Project Tiger திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் Tiger Anthem உருவாக்கப்பட்டுள்ளது.
பஜன் கெளர்
- துருக்கியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பஜன் கெளர் தங்கம் வென்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக அரிவாள் செல் தினம் (World Sickle Cell Day) – ஜூன் 19
- கருப்பொருள்: Hope Through Progress: Advancing Care Globally