Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th March 2025

Daily Current Affairs 

Here we have updated 19th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

IIT மெட்ராஸ்

Vetri Study Center Current Affairs - Chennai IIT

  • சமீபத்தில் ஸ்ரீஎஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்தினை திறந்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

  • இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பியுள்ளார்.

கஞ்சர்

  • கிர்கிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான கஞ்சர் என்னும் கூட்டு இராணுவப்பயிற்சியானது கிர்கிஸ்தானில் வைத்து நடைபெறுகிறது.

சத்ரபதி சிவாஜி

  • மாகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி கோவில் திறக்கப்பட்டுள்ளது.
  • சிவாஜிக்கு முதன் முதலாக திறக்கப்பட்ட கோவில் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • சிவாஜி தாய் – ஜீஜா பாய்
  • பாதுகாவலர் – தாதாஜி கொண்டதேவ்
  • குரு – ராம்தாஸ்
  • சிவாஜி போன்ஸ்லே குடும்பத்தினை சேர்ந்தவர்.
  • முடிசூட்டும் விழா – 1674 (ராய்கர் கோட்டை)
  • சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதன்ற்கு இணையாது.
  • சிவாஜியின் அமைச்சரவை குழு – அஷ்டபிரதான்

ராஜீவ் யுவ விகாசம் திட்டம்

  • இளைஞர்கள் தொழில் புரிய 3 லட்சம் வரை கடன் கொடுக்க ராஜீவ் யுவ விகாசம் திட்டம் தெலுங்கனாவில் தொடங்கப்பட்டுள்ளது.

நுண்செயலி

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விக்ரம் 3201, கல்பனா 3201 என்ற நுண்செயலிகளை உருவாக்கவுள்ளது.

நிலவு

Vetri Study Center Current Affairs - Saturn

  • சனி கிரகத்தில் புதிதாக 128 நிலவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சனி கிரத்திற்கு 274 நிலவுகள் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோள்கள்துணைக்கோள்கள்
புதன்இல்லை
வெள்ளிஇல்லை
பூமி1
செவ்வாய்2
வியாழன்95
சனி274
யுரேனஸ்27
நெப்டியூன்14

உலகக் கோப்பை 2025

  • இங்கிலாந்து நாட்டில் கபடி உலகக்கோப்பை 2025 நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

உலக மறு சுழற்சி தினம் (Global Recycle Day) – மார்ச் 18

Related Links

Leave a Comment