Daily Current Affairs
Here we have updated 19th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விஸ்வகர்மா திட்டம்
- தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் விஸ்வகர்மா திட்டமானது (Vishwakarma Scheme) தொடங்கப்பட்டுள்ளது.
- திட்டம் தொடங்கபட்டுள்ள நாள் : 17.09.2023
தொடர்புடைய செய்திகள்
|
மேற்குத் தொடர்ச்சி மலை
- ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை பகுதியிலுள்ள இருவாச்சி பறவைகளை பாதுகாக்க வேண்டும் என வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
- உலகின் 200 முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையில் 4 இருவாச்சி இனப் பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- மலவார் கருப்பு வெள்ளை இருவாச்சி
- இந்திய சாம்பல் இருவாச்சி
- மலபார் சாம்பல் இருவாச்சி
- மலை இருவாச்சி
- உலகில் 55 இன இருவாச்சி பறவைகளும், இந்தியாவில் 6 இன இருவாச்சி பறவைகளும் உள்ளன.
ஐ.நா.விருது
- தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2023 வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆளுநர்கள்
- ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக பாஜக தேசிய துணைத்தலைவரான ரகுமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
- திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக இந்திர சேனா ரெட்டி நல்லு நியமிக்கப்பட்டுள்ளார்.
அருங்காட்சியகம் திறப்பு
- உத்திரகாண்ட்டின் முசோரியின் பார்க் எஸ்டேட்டில் சர்ஜார்ஜ் அருங்காட்சியகமானது திறக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
|
உலக உணவு இந்தியா கண்காட்சி 2023
- நவம்பர் மாத்தில் டெல்லி பிரகதி மைதானத்தில் உலக உணவு இந்தியா கண்காட்சி நடைபெற உள்ளது.
- சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய உணவு முக்கியத்துவத்தினை குறிக்கும் விதமாகவும் இக்கண்காட்சியானது நடைபெற உள்ளது.
- இந்தியாவுடன் நெதர்லாந்து இணைந்து இக்கண்காட்சியினை நடத்துகிறது.
உலக திறமைகள் தரவரிசை 2023
- மக்களின் வாழ்க்கைதரம், குறைந்தபட்ச ஊதியம், கல்வி ஆகியவற்றின் ஆய்வுகளின் படி 2023 ஆண்டுக்கான உலக திறமைகள் தரவரிசையை சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனமானது வெளியிடப்பட்டுள்ளது.
- முதலிடம் – சுவிட்சர்லாந்து, இரண்டாம் இடம் – லக்சம்பர்க், மூன்றாம் இடம் – ஐஸ்லாந்து போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
- 64 நாடுகள் அடங்கியுள்ள இப்பட்டியலில் இந்தியா 56வது இடம் பிடித்துள்ளது
தொடர்புடைய செய்திகள்
|
AIBD அமைப்பின் தலைமை நீடிப்பு
- ஆசிய-பசுபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பானது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- AIBD எனப்படும் ASIA (Pacific Institute For Broadcasting Development) 1977-ல் உருவாக்கப்பட்டது.
- இதன் தலைமையகம் மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.
அரிந்தகம் பாக்சி
- ஜெனிவாவில் ஐ.நா.வுக்கான இந்திய தூதராக அரிந்தகம் பாக்சி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டி
- அக்டோபர் 25-ல் கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டியானது நடைபெற உள்ளது.