Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th September 2023

Daily Current Affairs

Here we have updated 19th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு (Special Conference on Tamil Ancient History)

 

  • செப்டம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் 10வது தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடானது நடைபெற உள்ளது
  • இம்மாநாட்டில் 10பேருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட உள்ளது.

யுனஸ்கோ – பாரம்பரிய தலம்

Vetri Study Center Current Affairs - chennakeshava temple

  • கர்நாடகாவிலுள்ள ஹொய்சாளர்களின் புனித குழுமங்களின் மூன்று கோவில்கள் யுனஸ்கோ பாரம்பரிய தல பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
    1. சென்னகேசவ கோயில், வேலூர் (விஷ்ணுவர்த்தன மன்னன் – கி.பி. 1117)
    2. கேசவா கோயில், சோமநாப்பூர் (சோமநாத தண்ட நாயக்கர் – கி.பி. 1268)
    3. ஹெய்சலேஷ்வரா கோயில், ஹலேபிடு (கி.பி. 1121)
  • யுனஸ்கோ பராம்பரிய தலப்பட்டியல் 6வது இடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்த்தில் போல்பூர் என்னுமிடத்தில் உள்ள சாந்திநிகேதனை யுனஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய இ-பூமி போர்ட்டல்

Vetri Study Center Current Affairs - New E-Bhoomi Portal

  • ஹரியானாவில் புதிய நிலம் வாங்குவதற்கான புதிய இ-பூமி போர்ட்டலானது (New E-Bhoomi Portal) அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மூலம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • நிலம் வாங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் இந்த போர்டலானது துவங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR)-மானது குழந்தை பராமரிப்பு இல்லங்களை கண்காணிக்க MASI Portal-ஆனது உருவாக்கப்பட்டுள்ளது.
  • அதிதி போர்டல் (Athidhi Portal) புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கேரளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
  • ராஜ்மார்க் யாத்திரா (Rajmarg Yatra App) நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது குறைகளை தெரிவிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  • உல்லாஸ் செயலியானது (ULLAS App) 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கப்பட்டது
  • மணற்கேணி செயலி (Manarkeni App) 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிப்பதற்கா உருவாக்கப்பட்டது

வருணா கூட்டு கடற்படைப் பயிற்சி (Joint Naval Exercise Varuna)

Vetri Study Center Current Affairs - Joint Naval Exercise Varuna

  • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான 21வது வருணா கூட்டு பயிற்சியானது அரபிக்கடலில் நடைபெற்றுள்ளது.
  • இப்பயிற்சியானது 1993 முதல் நடைபெற்று வருகிறது.
  • 2001 இக்கடற்படை பயிற்சிக்கு வருணா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா மற்றும் யுஏஇ கடற்படை கூட்டு இராணுவ போர் பயிற்சியானது சயீத் தல்வார் பயிற்சி என்றும் பெயரில் நடைபெற்றுள்ளது.
  • சவுதி அரேபியா, ஜூபைலில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா பங்கேற்ற அல்-மொஹத்-அல் ஹிந்தி கூட்டு இராணுவப் போர் பயிற்சி நடைபெற்றுள்ளது.

சந்தேஸ் செயலி (Sandes App)

Vetri Study Center Current Affairs - Sandes App

  • 2020-ல் டெல்லி காவல் துறை பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள தேசிய தகவல் மையத்தால உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அரசு திட்டங்கள், தி.மு.க.வின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • G20க்காக G20 இந்தியா செயலி உருவாக்கப்பட்டள்ளது.
  • நப்மித்ரா (Nabhmitra) செயலியானது மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தையும், வானிலை அறியவும், ஆபத்து நேரங்களில் உதவ ISRO-வால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருடா ஷீல்டு (Garuda Shield)

Vetri Study Center Current Affairs - Garuda Shield

  • ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தோனேசியா நாடுகளுக்கு இடையோன கூட்டு ராணுவப் பயிற்சி ஆகும்.
  • 2009 முதல் அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்று வருகிறது
  • இந்தோனேசியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • எகிப்து கெய்ரோவில் நடைபெறும் பன்னாட்டு போர்ப் பயிற்சியில் அமெரிக்கா, சவூதி அரேபியா, கீரிஸ், கத்தார், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

ஹாக்கி தரவரிசை பட்டியல் (Hockey Ranking List)

Vetri Study Center Current Affairs - International Hockey Federation

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள ஹாக்கி தர வரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை நெதர்லாந்து, பெல்ஜியம் பிடித்துள்ளன.
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியாது 3வது இடம் பிடித்துள்ளது.
  • மகளிர் ஹாக்கி அணியானது 7வது இடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் பார்முலா 1 கார் பந்தயம் (Singapore Formula 1 car race)

Vetri Study Center Current Affairs - Singapore Formula 1 car race

  • கார்லோஸ் சைன்ஸ் (பெராரி) முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • லாண்டோ நோரிஸ் (மெர்சிடிஸ்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

September 17 Current Affairs | September 18 Current Affairs

Leave a Comment