Daily Current Affairs
Here we have updated 1st and 2nd January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
திருக்குறள் வாரம்
- ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- திருவள்ளுவர் ஆண்டு 5வது உலகத்தமிழ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
- திருவள்ளுவர் சிலை – 133 அடி
- எடை – 7000 டன்
- கற்கள் எண்ணிக்கை – 3681
கடல் கண்ணாடி பாலம்
- கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளூவர் சிலையையும் இணைக்கும் வகையில் கடல் மீது கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- 2000 ஜனவரி 1-ல் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கடல் மீது அமைக்கப்பட்ட மிக நீளமான பாலம் – அடல் சேது பாலம் (21.8 கி.மீ), மகாராஷ்டிரா
விஜய கரிசல்குளம்
- வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் கைரேகை பதிவுடன் கூடிய அல்லி மொட்டு வடிவிலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாநகராட்சி
- தமிழகத்தின் புதிய மாநகராட்சியாக ஊட்டி உருவாக உள்ளது.
புதிய மாநகராட்சி நிபந்தனை
- மக்கள்தொகை – 2 லட்சம்
- வருமானம் – 20 கோடி
தமிழ் கற்பித்தல் திட்டம்
- பிஜி தீவில் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை
- இந்தியாவில் வடகிழக்கு பருவ மழை டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தது.
- வடகிழக்கு பருவ மழை காலம் – அக்டோபர் முதல் டிசம்பர்
- சராசரி மழைப்பொழிவு – 44.2 செ.மீ.
சீர்திருத்த ஆண்டு
- 2025-ஆம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஐ.நா. அறிவித்துள்ள ஆண்டுகள்
- 2024 – சர்வதேச ஒட்டக ஆண்டு
- 2025 – சர்வதேச கூட்டுறவு ஆண்டு, சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு ஆண்டு, சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு, சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு
- 2026- சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு
பணக்கார முதல்வர்கள்
- முதலிடம் – சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்வர்)
- கடைசி இடம் – மம்தா பானர்ஜி (மேற்கு வங்காள முதல்வர்)
- 14வது இடம் – மு.க.ஸ்டாலின் (தமிழக முதல்வர்)
மக்கள் தொகை
- இந்தியாவில் 141 கோடி மக்கள்தொகையுடன் மக்கள்தொகை பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளது.
- சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
- உலகின் மக்கள்தொகை 809 கோடியை தாண்டி உள்ளது.
விவாட் சே விஸ்வாஸ் திட்டம்
- வரி செலுத்தும்போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தினை நிதி அமைச்சகம் துவங்கியுள்ளது.
சிவாஜி சிலை
- இந்திய ராணுவம் பாங்காங் ஏரியில் சிவாஜி சிலையை நிறுவியுள்ளது.
- இது இந்திய-சீனா எல்லையை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அமைந்துள்ளது.
வெப்பமான ஆண்டு
- இந்தியாவில் 2024-ஆம் ஆண்டை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளது.
CRPF
- CRPF-ன் டிரைக்டர் ஜெனரலாக விதுல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- CRPF – (Central Reserve Police Force) – மத்திய ரிசர்வ் போலீஸ் படை
- உருவாக்கப்பட் நாள் – 27.07.1939
அபிஜித் பானர்ஜி
- Chhanuk on Food, Economics and Society என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
- 2019-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
டுராண்ட் கோடு
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2640 கி.மீ தொலைவில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.
- இக்கோடு 1893-ல் வரையப்பட்டள்ளது.
ஜிம்மி கார்ட்டர்
- சமீபத்தில் அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் காலமானார்.
- இவரின் இந்திய வருகையையொட்டி ஹரியானாவில் உள்ள தெளலத்பூர் கிராமம் இவரின் பெயரிலே கார்டர்புரி என்று அழைக்கப்படுகிறது.
கிரிபாதி
- நியூசிலாந்தின் அருகில் உள்ள தீவான கிரிபதி (Kiribati) தீவு முதலில் புத்தாண்டை கொண்டாடியது.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்
- அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
உலக குடும்ப தினம் (Global Family Day) – ஜனவரி 1
உலக உள்முக சிந்தனையாளர்கள் தினம் (World Introverts Day) – ஜனவரி 2