Daily Current Affairs
Here we have updated 1st April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பத்திரப்பதிவு
- இன்று முதல் (ஏப்ரல் 1) மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்வோருக்கு கட்டணம் 1% குறைப்பு அமலுக்கு வருகிறது.
- 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது பதிவு கட்டணம் 1% குறைக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புவிசார் குறியீடு
- தமிழ்நாட்டின் விளாச்சேரியின் களிமண் பொம்மைக்கும், மதுரை மரிக்கொழுந்திற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.
- புவிசார் குறியீட்டில் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- உத்திரப்பிரதேச மாநிலம் கல்வியின் தரத்தை மேம்படுத்த UNESCOவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
நிதி திவாரி
- பிரதமரின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுற்றுச்சூழல் மாநாடு
- தேசிய சுற்றுச்சூழல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
சர்ஹூல் திருவிழா
- ஜார்கண்ட் மாநிலத்தில் சர்ஹூல் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.
BIMSTEC உச்சி மாநாடு
- 6வது BIMSTEC உச்சி மாநாடானது தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இனியோகோஸ் பயிற்சி
- இந்தியாவிற்கும், கிரீஸ்ஸிற்கும் இடையே கூட்டு விமானப் பயிற்சியானது இனியோகோஸ் பயிற்சி நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- அண்மையில் இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே ஜகெய்மே என்ற பெயரில் கூட்டு கடற்படைப் பயிற்சி நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
ஒடிசா மாநில தினம் (Odisha Day) – ஏப்ரல் 01