Daily Current Affairs
Here we have updated 1st December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பதவி நீட்டிப்பு
- சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பேரவை செயலாளராக பணிக்கு பதிலாக பேரவை முதன்மை செயலாளர் பதவி வழங்கபட்டு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரிகால் சோழன் விருது
- வெளிநாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கரிகால் சோழன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- தஞ்சாவூர் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை இணைந்து 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான கரிகால் சோழன் விருதிற்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- 2021ஆம் ஆண்டு விருது
- இளந்தமிழன் (மலேசியா) – இளந்தமிழன் சிறுகதைகள்
- ரமா சுரேஷ் (சிங்கப்பூர்) – அம்பரம்
- சிவ.ஆரூரன் (இலங்கை) – ஆதுரசாலை
- 2022ஆம் ஆண்டு விருது
- எம்.கருணாகரன் (மலேசியா) – உள்ளங்கை கடவுளும் அஜந்தா பேரழகியும்
- பொன் சுந்தர ராஜ் (சிங்கப்பூர்) – துமாசிக்
- நோயல் நடேசன் (இலங்கை) – பண்ணையில் ஒரு மிருகம்
இலக்கு நிர்ணயம்
- 2030ஆம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் ஹெச்ஐவி தொற்றின் அளவு .17%மாக உள்ளது.
- தேசிய அளவில் ஹெச்ஐவி தொற்றின் அளவு .22%மாக உள்ளது
- உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தினம் – டிசம்பர் 1
- கருப்பொருள் : சமூகங்களுடன் இணைந்து செயல்பட்ட ஹெச்ஐவி எய்ட்ஸ் தொற்றைக் குறைக்கும் செயலை முன்னெடுப்போம்
மிக்ஜம் புயல் (Mikjam)
- டிசம்பர் 3-ல் உருவாகும் மிக்ஜம் புயல் வடதமிழகம், தென் ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- இப்புயலுக்கு மிக்ஜம் என பெயரை மியானமர் நாடானது தந்துள்ளது.
திஷா நாயர்
- கோவாவில் விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவில் திஷா நாயர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
- விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் ஏற்படும் தீ விபத்துகளை அணைக்கும் பணியில் ஈடுபடும் நாட்டின் முதல் பெண் தீயணைப்பு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
- 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.6% வளர்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2022-2023 ஜூலை–செப்டம்பர் வரையிலான காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2%மாக இருந்துள்ளது.
- அக்டோபர் மாத முடிவில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடியாக உள்ளது.
நூல் வெளியீடு
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
- Mallikarjun Kharge : Political Engagement With Compassion, Justice and Inclusive Development
- நூல் ஆசிரியர்கள் : சுகதேயோ தோரட் மற்றும் சேத்தன் ஷிண்டே
மாநில மீன்
- தங்க பழுப்பு நிறத்துடன் காணப்படும் கோல்மீன் குஜராத் மாநிலத்தின் மாநில மீனாக அறிவிக்கப்பட்டது.
- குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளில் காணப்படுகிறது.
ஆளுநர் ஒப்புதல்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகின்ற மசோதாவுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
- போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை ரூ.10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.
மின்சார உற்பத்தி
- உலக அளவில் மின்சாரம் அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மின்சாரச் சட்டம் 2023, பிரிவு 135-ன்படி மின்சார திருட்டு குற்ற தண்டனையாக கருதப்படுகிறது.
மக்கள் மருந்தகம்
- ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000-ஆவது மக்கள் மருத்தகத்தினை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
- மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 25,000-ஆக உயர்த்தும் திட்டத்தினையும் தொடங்கி வைத்துள்ளார்.
- மக்கள் மருந்தகம் திட்டம் – 2015
- தமிழ்நாட்டில் 02.11.2016-ல் கோயம்புத்தூரில் முதல் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது.
மகளிருக்கான ட்ரோன் திட்டம்
- 30.11.2023-ல் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
உலக பருவ நிலை மாநாடு
- டிசம்பர் 1-ல் துபாயில் உலக பருவநிலை மாநாடானது நடைபெற உள்ளது.
- கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயு உமிழ்தலை குறைத்தல், கடுமையான பருவநிலை மாற்ற பாதுகாப்புகளை எதிர்கொள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
தலைமை ஏற்பு
- டிசம்பர் 30-ல் ஜி-20 கூட்டமைப்பிற்கான இந்தியாவின் ஓராண்டு தலைமை பொறுப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஜி-20 தலைமை பொறுப்பினை பிரேசில் ஏற்றுள்ளது.
விமான பயன்பாடு நிறுத்தி வைப்பு
- அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆஸ்ப்ரே ரக விமானங்களை இயக்க ஜப்பான் தடை விதித்துள்ளது.
- 8பேருடன் சென்ற விமானத கடலில் விழுந்து விபத்துகுள்ளானதை தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளது.
உலக எய்ட்ஸ் தினம் (World Aids Day) – Dec 1
- கருப்பொருள் : “Let Communicate Lead”
உலகளாவிய மனித உரிமைகள் மாதம் (Universal Human Rights Month) – Dec 1
உலகளாவிய உணவு சேவை பாதுகாப்பு மாதம் (Worldwide Food Service Safety Month) – Dec 1
November 29 Current Affairs | November 30 Current Affairs