Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st February 2025

Daily Current Affairs

Here we have updated 1st February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்

Vetri Study Center Current Affairs - dugong conservation centre

  • தஞ்சாவூரின் மனோரா என்னுமிடத்தில் கடற்பசுவை பாதுகாக்க சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம் அமைய உள்ளது.

ஜே.சி.குமரப்பா

  • ஜே.சி.குமாரப்பா இறந்த தினம் – ஜனவரி 30

தொடர்புடைய செய்திகள்

 

  • இந்தியாவின் கிராம பொருளாதாரத்தின் தந்தையென ஜே.சி.குமாரப்பா அறியப்படுகிறார்.
  • காந்தியப்பொருளாதாரம் என்ற கருத்தை உருவாக்கினார்.
  • 1935-ல் அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை தோற்றுவித்தவர்.
  • நிலைத்த பொருளாதாரம், இயேசுவின் வழிமுறைகள் (1945), கிறிந்துவம்: அதன் பொருளாதாரமுதம் வாழ்க்கை முறையும் (1945) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • இராமச்சந்திர குஹா ஜே.சி.குமாரப்பாவை பச்சை காந்தி என்று அழைத்தார்.

மகாத்மா காந்தி

  • தீண்டாமை ஒரு பாவச்செயல், அதை பின்பற்றுகின்ற நீங்கள் ஒரு ஜெனரல் டயர் எனக் காந்தியடிகள் கூறினார்.
  • காந்தியடிகள் இறந்த தினம் – ஜனவரி 30

பட்ஜெட் தாக்கல்

  • நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கின்றார்.
  • இவர் 8வது முறையாக தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செயல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அதிக முறை பட்ஜெட் தாக்கல்

  • மொரார்ஜி தேசாய் – 10 முறை
  • ப சிதம்பரம் – 9 முறை
  • பிரணாப் முகர்ஜி – 8 முறை
  • யஷ்வந்த் சின்ஹா – 8 முறை
  • மன்மோகன் சிங் – 6 முறை

சுபான்சு சுக்லா

  • சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் ஆக்ஸிம்-4 திட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.
  • இத்திட்டதிற்கு தேர்வான முதல் இந்தியர் இவராவார்

தொடர்புடைய செய்திகள்

ககன்யான் திட்டத்தற்கு தேர்வானவர்கள்

  • சுபான்சு சுக்லா
  • அங்கத் பிரதாப்
  • அஜித் கிருஷ்ணன்
  • பிரசாந்த் பாலகிருஷ்ணன்

மன மித்ரா சேவை

  • ஆந்திராவில் அரசின் சேவைகளை பெற வாட்ஸ்அப்பில் மன மித்ரா என்னும் சேவையை தொடங்கியுள்ளது.

தேசிய நல்லாட்சி மாநாடு 2025

  • குஜராத்தின் காந்தி நகரில் தேசிய நல்லாட்சி மாநாடு நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய நல்லாட்சி தினம் – Dec 25 (வாஜ்பாய் பிறந்தநாள்)

SwaRail

  • இரயில் சேவைகளை பெற SwaRail செயலில் தொடங்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

Vetri Study Center Current Affairs - Sachin Tendulkar

  • BCCI வாழ்நாள் சாதனையாளர் விருதான C.K.நாயுடு விருதானது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டி

  • 9வது ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டியானது சீனாவில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

இந்திய கடலோர காவல்படை  தினம் (Indian Coast Guard Day) – பிப்ரவரி 1

Related Links

Leave a Comment