Daily Current Affairs
Here we have updated 1st January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அண்ணா தலைமைத்துவ விருது
- அண்ணா தலைமைத்துவ விருது 100 பள்ளி தலைமை ஆசியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- அறிஞர் அண்ணா நினைவு விருது – மாவட்ட அளவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது.
- அறிஞர் அண்ணா விருது – வீர தீர செயல் புரிபவர்களுக்காக வழங்கப்படுகிறது.
பாரத் ஜிபிடி (Bharat GPT)
- சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்திற்கு போட்டியாக பாரத் ஜிபிடி உருவாக்கப்பட உள்ளது.
- பாரத் ஜிபிடி-யை ரிலையன்ஸ் நிறுவனமானது மும்பை ஐஐடியுடன் இணைந்து உருவாக்க உள்ளது.
டி.குகேஷ்
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறும் 5வது போட்டியாளர் ஆவார்.
- இதுவரை ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, கோனெரு ஹம்பி, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
நிதிக்குழு அமைப்பு
- அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு அமைக்கப்பட்டது.
- நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.
- மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் இக்குழு பரிந்துரை அளிக்கும் வகையில் செயல்படுகிறது.
- நிதி ஆணையம் – பிரிவு 280
- பதவிக்காலம் – 5 ஆண்டுகள்
- குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
ஒரு நாடு ஒரு பாஸ்
- மரம், மூங்கில் உள்ளிட்ட காடு சார்ந்த பொருள்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒரு நாடு ஒரு பாஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதற்கு நேஷனல் டிரான்சிஸ்ட் பாஸ் சிஸ்டம் (NTPS) என பெயரிடப்பட்டது.
சிறப்பு அஞ்சல்தலை
- இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டு கால நினைவுகளை கெளரவப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையானது தில்லியில் வெளியிடப்பட்டுள்ளது.
துவராகா
- குஜராத்தின் துவராகாவில் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவை தொடங்கியுள்ளது.
- இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவையை தொடங்கிய மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- கடலுக்கு அடியில் உள்ள இயற்கையை அறிந்து கொள்ளும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.
அப்போஃபிஸ்
- 13.04.2029-ல் அப்போஃபிஸ் என்ற சிறுகோளானது 32,000 கி.மீ அளவில் பூமியை நெருங்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சைபர் ஸ்வச்தா கேந்திரா
- எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்பிற்காக சைபர் ஸ்வச்தா கேந்திரா மத்திய அரசு புதிய இணையதளத்தினை உருவாக்கியுள்ளது.
நியூசிலாந்து
- நியூசிலாந்து நாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு முதலில் பிறந்தது.
- 2024 புத்தாண்டை கொண்டாடும் நாடாக நியூசிலாந்து திகழ்கிறது.
ஸ்குவாஷ் போட்டி
- 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் போட்டி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்க தினம் (DRDO Day) – Jan 01
- DRDO (Defence Research and Development Organisation) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் – 1958
- தலைவர் – எஸ்.வி. வெங்கட்
- தலைமையகம் – புதுதில்லி
உலகாளவிய குடும்ப தினம் (Global Family Day) – Jan 01
December 28 Current Affairs | December 29th to 31st Current Affairs