Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st March 2024

Daily Current Affairs

Here we have updated 1st March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

இ-டிக்கெட்

Vetri Study Center Current Affairs - Electronic ticket

  • மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலமாக இ-டிக்கெட் பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
  • தமிழக அரசு இத்திட்டத்தினை பாரத் ஸ்டேட் பாங்குடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

  • நடப்பு காலாண்டில் (டிசம்பர் 3வது காலாண்டு) பொருளாதார வளர்ச்சியானது 8.40%-மாக உள்ளதென தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • கடந்த காலாண்டை விட (7.60%) பொருளாதர வளர்ச்சியானது தற்போது உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்து ஏவுகணை தயாரிப்பு வளாகம்

  • உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய முதல் வெடிமருந்து ஏவுகணை தயாரிப்பு வளாத்தினை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது நாட்டின் முதல் வெடிமருந்து ஏவுகணை தயாரிப்பு வளாகமாகும்.

சிறுத்தைகளின் எண்ணிக்கை

  • இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி 13,874-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
  • 2018-ல் சிறுத்தைகளின் எண்ணிக்கை 12,852ஆக இருந்தது.
  • தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிர்வாகம் (WII) இணைந்து இக்கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
  • NTCA – National Tiger Conservation Authority – 2005
  • WII – Wildlife Institute of India -1982

மாநிலங்கள் அளவில் புலிகளின் எண்ணிக்கை

  1. முதலிடம் – மத்தியப்பிரதேசம் (3907)
  2. இரண்டாம் இடம் – மகாராஷ்டிரா (1985)
  3. மூன்றாம் இடம் – கர்நாடகா (1879)
  4. நான்காம் இடம் – தமிழ்நாடு (1070)

சுயம் பிளஸ் (SWAYAM PLUS)

  • வேலை வாய்ப்பை அதிகரிக்க மெட்ராஸ் ஐஐடி சுயம் பிளஸ் (SWAYAM PLUS) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஹைட்ரஜன் படகு

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் படகு சேவையானது கொச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PS ஸ்ரீதரன் பிள்ளை

Vetri Study Center Current Affairs - Sreedharan Pillai

  • கேவாவின் ஆளுநரான PS ஸ்ரீதரன் பிள்ளை Basic Structure & Republic என்னும் நூலினை எழுதியுள்ளார்.

ஆய்வு மையம்

  • 2028ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையமானது பாரதிய அந்தரிஷா நிலையம் (Bharatiya Space Station) என்னும் பெயரில் அமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ (ISRO) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ISRO – Indian Space Research Organisation – 15.08.1969

ATGM பயிற்சி

  • மேற்கு வங்கம் தீஸ்தா சோதனை மையத்தில் ஏடிஜிம் (ATGM) என்னும் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் பயிற்சியானது நடைபெற்றது.
  • ATGM – Anti Tank Guided Missile

அவசர நிலை

  • பெரு நாடு டெங்கு சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது

பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero Discrimination Day) மார்ச் 01

Vetri Study Center Current Affairs - Zero Discrimination Day

  • கருப்பொருள்: To protect everyone’s health, protect everyone’s rights.

உலக கடற்கரும்புலி தினம் (World Seagrass Day) மார்ச் 01

உலக சிவில் பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) மார்ச் 01

Vetri Study Center Current Affairs - World Civil Defence Day

சுய காயம் விழிப்புணர்வு தினம் (Self-Injury Awareness Day) மார்ச் 01

Vetri Study Center Current Affairs - Self-Injury Awareness Day

 

February 28 Current Affairs | February 29 Current Affairs

Related Links

Leave a Comment