Daily Current Affairs
Here we have updated 1st May current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பத்ம பூஷன் விருது
- இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதானது நடிகர் அஜித்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மேலும் ஷோபனா சந்திரகுமார் (பரதநாட்டியம்), நல்லி குப்புசாமி (தொழிலதிபர்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1954 ஜனவரி 2-ல் இந்திய குடியரசுத்தலைவர் இவ்விருதினை நிறுவினார்.
- முதன் முதலில் வழங்கப்பட்ட ஆண்டு – 1954
பத்ம ஸ்ரீ விருது
- தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின், கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி சேர்க்கை
- தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 47%மாக உயர்ந்துள்ளது.
- இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை – 28.4%
வறுமை விகிதம்
- 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வறுமைக்கோடு விகிதம் 1.43%ஆக உள்ளதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் வறுமைக்கோடு விகிதம் – 11.2%
- இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை – 28.4%
உற்பத்தி திறன்
- தேசிய அளவில் தமிழ்நாடு எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- மக்காச்சோள உற்பத்தி திறனில் 2வது இடமும், நெல் உற்பத்தி திறனில் 3வது இடமும் பிடித்துள்ளது.
அலோக் ஜோஷி
- தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுத்தலைவராக அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு 78வது லோகேர்னா திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கபடவுள்ளது.
முக்கிய தினம்
உலக தொழிலாளர் தினம் (International Labour Day) – மே 1
- 1923 மே 1-ல் சிங்காரவேலரால் தொழிலாளர் தினம் (மே தினம்) கொண்டாடப்பட்டது.
- 1959 Jan 25 இல் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை நிறுவப்பட்டது.
மகாராஷ்டிரா மாநில தினம் (Maharashtra Day) – மே 1
- மகாராஷ்டிரா தினம் – மே 1, 1960
குஜராத் மாநில தினம் (Gujarat Day) – மே 1