Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st November 2024

Daily Current Affairs

Here we have updated 1st November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்த்தாய் வாழ்த்து

Vetri Study Center Current Affairs - Tamilthai Valthu

  • தமிழ்த்தாய் வாழ்த்து 1970ஆம் ஆண்டு மாநில பாடலாக கொண்டு வரப்பட்டது.
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடலானது சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மனோன்மணீயம் தமிழில் தோன்றிய முதல் நாடக நூல் ஆகும்.
  • மனோன்மணீயம் நூலானது லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி நூலினைத் தழுவி எழுதப்பட்டது
  • இதன் ஆசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை
  • 1891-ல் வெளியிடப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர் தொகுதி

  • தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது.
  • வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,73,230

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் தொகுதி உள்ளது.

போலீஸ் அக்கா திட்டம்

  • கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சேலம் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டிருந்துள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை

Vetri Study Center Current Affairs - Helicopter Ambulance Service

  • இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையானது உத்திரகாண்ட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

ஜெனெரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு மையம்

  • ராஜஸ்தானில் ஜெனெரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு மையம் நிறுவப்பட உள்ளது.

ம.இராஜேந்திரன்

Vetri Study Center Current Affairs - M.Rajendran

  • தமிழக வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.இராஜேந்திரன் தேர்வாகியுள்ளார்.

நிலக்கரி கலைக்கூடம்

  • புதுதில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் இந்தியாவின் முதல் நிலக்கரி கலைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

படை விலக்கம்

  • இந்தியா & சீன படைகளானது கிழக்கு லடாக் பகுதியிலுள்ள டெம்சாக், டெங்சாக் பகுதிகளில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

உதவித்தொகை திட்டம்

  • துடிப்புமிக்க இந்தியாவினை உருவாக்குதற்காக பிரதான் மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
  • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இத்திட்டத்தினை துவக்கியுள்ளது.

பசுமை பட்டாசுகள்

  • SWAS, STAR & SAFAL போன்ற பசுமை பட்டாசுககளை தயாரிக்கும் பணியில் NEERI அமைப்பு ஈடுபட்டுள்ளது.

மாசுபட்ட நகரம்

  • உலகின் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது.

சுமதி தர்மவர்தன

Vetri Study Center Current Affairs - Sumathi Dharmavardhana

  • ICCI-யின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக சுமதி தர்மவர்தன (Sumathi Dharmavardhana) தேர்வாகியுள்ளார்.

பாலன் டி ஓர் விருது 2024

  • ஆண்டுதோறும் பிரான்ஸ் கால்பந்து சங்கமானது (FFF) பாலன் டி ஓர் விருது (Ballon d’or)  விருதினை வழங்கி வருகிறது.
  • சிறந்த வீராங்கனை விருது – ஐதானா பொன்மதி (Aitana Bonmati)
  • சிறந்த வீரர் விருது – ரோட்ரி (Rodri)

தொடர்புடைய செய்திகள்

பாலன் டி ஓர் விருது 2023

  • சிறந்த வீரர் – மெஸ்ஸி (அர்ஜென்டினா)
  • சிறந்த வீராங்கனை – ஐதானா பொன்மதி (ஸ்பெயின்)

முக்கிய தினம்

தேசிய ஒற்றுமை தினம் (National Unity Day) – அக்டோபர் 31

  • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • இவருடைய பிறந்த நாளை மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கொண்டாட முடிவு செய்துள்ளது.

உலக நகரங்கள் தினம் (World Cities Day) – அக்டோபர் 31

உலக சைவ தினம் (World Vegan Day) – நவம்பர் 1

  • World Vegetarian Day – அக்டோபர் 1

கர்நாடாகா மாநில தினம் – நவம்பர் 1

  • 1956-ல் கொண்டு வரப்பட்ட மொழி வாரி மாநில சட்டத்தின் படி 1.11.1956-ல் உருவாக்கப்பட்டது

ஹரியானா மாநில தினம் – நவம்பர் 1

  • 1.11.1966 பஞ்சாப் மாநிலமானது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
  • ஜே.சி.ஷா கமிஷன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

Related Links

Leave a Comment