Daily Current Affairs
Here we have updated 01st October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஜிஎஸ்டி அமல்
- இணைய விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28% ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் திருத்தச் சட்டம் இன்று முதல் (அக்டோபர் 1) அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்திற்கு முகமது நசிமுதின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Aging Report 2023)
- மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியம் வெளியிட்டள்ள இந்திய முதியோர் அறிக்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது.
- இவ்வறிக்கையில் இந்திய முதியவர்களில் 40% ஏழ்மையாகவும் அதில் 18.7%பேர் வருமானம் இல்லாமல் இருக்கின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2050 ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% முதியோர்களாக இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது.
- தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது,
- மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-இல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.
ஃபிராங்க் ரூபியோ (Frank Rubio)
- 371 நாட்களாக விண்வெளியில் தங்கி இருந்த அமெரிக்கரான ஃபிராங்க் ரூபியோ பூமிக்கு திரும்பி உள்ளார்.
- இதன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்துள்ளார்.
- இதற்கு முன் மார்க் வந்தே ஹெய் 355 விண்வெளியில் தங்கியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனையாக வியோமித்ரா (Vyommitra) என்னும் பெண் AI ரோபாவானது விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
ஆசியப் போட்டி-சீனா
- 10மீ பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் – திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
- ஸ்குவாஷில் இந்திய அணி பிரிவில் செளரவ் கோஷல், மகேஷ் மகோன்கர், அபய் சிங் ஆகியோர் தங்கம் வென்றுள்ளது. ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி 8 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா-ருதுஜா போஸ்லே இணை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
- தடகளப் ஆடவர் 10,000மீ நீண்ட தூர ஓட்டத்தில் கார்திக்குமார் வெள்ளி பதக்கத்தையும், குல்வீர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மார்பக புற்றுநோய் மாதம் (Breast Cancer Awareness Month) – Oct 01 – Oct 31
உலக முதியோர் தினம் (International Day of Older Persons) – Oct 01
- கருப்பொருள்: “Fulfilling the Promises of the Universal Declaration of Human Rights for Older Persons: Across Generations”
உலக சைவ தினம் (World Vegetarian Day) – Oct 01
சர்வதேச காபி தினம் (International Coffee Day) – Oct 01
கருப்பொருள்: “Sustainability in Every Cup”