Daily Current Affairs
Here we have updated 20th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 9 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
- ஜனவரி 17ல் நடந்த கொலீஜியத்தின் கூட்டத்தில் 3 கீழமை நீதிபதிகள், 5 வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- பள்ளி சுகாதாரம், மாதவிடாய் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு இரு விருதுகளை பெற்றுள்ளது.
- ஜனவரி 19-ல் சென்னை ஆராய்ச்சி ஆராய்ச்சி குழவினரால் ஆண்ராய்டு-ஐஓஎஸ் உள்ளிட்ட வெளிநாட்டு இயங்கு தளங்களிற்கு நிகராக உள் நாட்டிலேயே கைப்பேசிக்கென இயங்குதளத்தை (BharOS Service) கண்டறிந்துள்ளனர்.
- ஜனவரி 19-ல் தமிழகத்தில் காவலர்களின் வாரிசுகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் ஆணையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
- 2001-ம் ஆண்டு 10% இட ஒதுக்கீட்டு கொண்டு வந்து தமிழக அரசு அராசணையை பிறப்பித்துள்ளது.
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) சிறிய வங்கிகளில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- ஜனவரி 20-ல் மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூன்றாவது கட்டமாக சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார்.
- இத்திட்டம் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டது.
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), ரயில்வே தேர்வு வாரியம், அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) உள்ளிடவற்றின் வாயிலாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை பின்னுக்கு இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- இந்தியா – 142.3 கோடி
- சீனா – 141.2 கோடி
- மாலத்தீவுகளில் உள்ள ஹனிமாதூ விமான நிலையத்தை இந்திய நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.
- ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் பரிசீலனையில் உள்ளதென மத்திய அரசு அறிவித்துள்ளது.
- உத்திர பிரதேசத்தின் பஸ்தியில் “சன்சத் கேல் மகாகும்ப்” (Sansad Khel Mahakumbh) என்னும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2 கட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- “கோவோவாக்ஸ்” கரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்கான கலப்பு முன்னெச்சரிக்கைய தவணை தடுப்பூசியாக கோ-வின் வலைதளத்தில் சேர்க்க வேண்டுமென சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது
முக்கிய தினம்
- பெங்கயின் விழிப்புணர்வு தினம்