Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20 – 21st November 2022

Daily Current Affairs

Here we have updated 20-21st November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • நாட்டிலே முதல் முறையாக கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டமானது தமிழகத்தில் தொடங்கப்படுமென அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார் .
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150வது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழக முதல்வர் https://www.tamildigitallibrary.in/voc என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
  • அரசுத்துறையில் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக கோப்புகள் அனைத்தையும் கணினி வழியே மட்டும் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் தலைமைச்செயலம் மற்றும் முக்கிய இதுவரை 2.5லட்சத்துக்கு மேற்பட்ட மின வழி கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தகவல் தொழில் நுட்பவியல் துறை தெரிவித்துள்ளது.
  • குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பு விகிதம் 22 சதவீதமாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
  • 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் தமிழக அரசுப்பள்ளிகளில் “மிஷன் இயற்கை” என்ற சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • தமிழக அரசு “நூலக நண்பர்கள் திட்டத்தை” தொடங்க உள்ளது.
    • டிசம்பர் 1-ல் சென்னையில் தொடங்க உள்ளது
  • சென்னையின் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 55-வது தேசிய நூலக வார விழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு “எழுத்துச்சிற்பி” விருதுகளும், வே.தணிகாசலத்திற்கு “நூலகத் தேனீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் சேலம் மாவட்டம் கால்நடை வளர்ப்பு தொழிலில் முன்னிலையில் உள்ளது.
  •  பொங்கல் அன்று இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேலைகள் 15வித வடிவமைப்புகளிலும் 5வித வடிவமைப்புகளில் வேஷ்டிகளும் தயாராகி வருகிறது.
    • இத்திட்டதினை அறிமுகப்படுத்தியவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (1983)

தேசிய செய்தி

  • ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
    • 2025-ல் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியான ராஜீவ் குமார் ஒய்வு பெறுகிறார்
  • பஞ்சாப் அமைச்சரவை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதன்முறையாக அந்தமான் நிக்கோபர் ஹோடி படகுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டள்ளது.
    • உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு  (2004) வழங்கப்பட்டது

உலக செய்தி

  • ஐ.நா. மாநாட்டில் பருவ நிலை இழப்பீட்டு நிதிக்கான தீர்மானம் இயற்றப்ட்டுள்ளது.
    • இத்தீர்மானத்தின்படி வளர்ந்த நாடுகளிடமிருந்து நிதியை பெற்று பருவ நிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளுக்கு நிதி வழங்கப்படும்.
  • தர்மசாலாவில் உள்ள காந்தி மண்டேலா அறக்கட்டளை திபெத்திய பெளத்த மதகுருவான தலாய் லாமா-விற்கு மகாத்மா காந்தி மண்டேலா விருது வழங்கியுள்ளது.
    • சீனசமீபத்தில் வென்டியன், மெங்டியன் என்ற ஆய்வுகலங்களை தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு செலுத்தியுள்ளது.
    • இஸ்ரோவால் பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை “எல்விஎம் 3” ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தபட்டது.

விளையாட்டு செய்தி

  • நவம்பர் 20-ல் “22வது உலக கோப்பை கால்பந்து போட்டி” கத்தாரில் தொடங்கியது.
  • 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்  போட்டியில் இந்தியா “25 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்” என 30 பதக்கங்கள் வென்றுள்ளது.
  • இந்தியாவின் மனிகா பத்ரா ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார்.
    • அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையையும், பதக்கம் வென்ற இந்திய பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

முக்கிய தினம்

  • உலக குழந்தைகள் தினம் (நவம்பர்-20)
    • கருப்பொருள் : “Inclusion, For Every Child”
  • உலக தொலைக்காட்சி தினம் (நவம்பர்-21)
    • கருப்பொருள் : “Attention”
  • பச்சிளங்குழந்தைகள்பாதுகாப்பு வாரம் (நவம்பர் 15-21).
  • சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவருக்கான உலக தினம் (நவம்பர்-20)

Nov 18 – Current Affairs | Nov 19 – Current Affairs

Leave a Comment