தமிழக பட்ஜெட்
- 2024-25 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டிற்கு மாபெரும் தமிழ் கனவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- பட்ஜெட் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் போன்ற 7 சிறப்பு அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
குடிசையில்லா தமிழ்நாடு
- 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
- 2024-25 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ. 3.5 லட்சம் மதிப்பில் கட்டித்தரப்பட உள்ளது.
தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்
- 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அகற்றிட முதலமைச்சர் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழ் புதல்வன் திட்டம்
- பிப்ரவரி 21-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடரில் 6-12 வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் படிக்கும் போது மாதம் ரூ.1000 வழங்க தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
சக்தி பூங்கா
- தூத்துக்குடியில் வான்வெளி சார்ந்த தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா 2000 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
ஜவுளி பூங்கா
- ரூ.20 கோடி செலவில் கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளி பூங்கா அமைய உள்ளது.
மொழித் தொழில்நுட்பப் புத்தொழில்
- மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.
நியோ டைடல் பார்க்
- ரூ.695 கோடி செலவில் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நியோ டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இலவச வைஃபை சேவை
- அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட உள்ளது.
தரணியெங்கும் தமிழ்
- உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்கள், நூலங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெறுவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு இயக்கம்
- தமிழக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
இரட்டைக் காப்பியங்கள்
- இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையை இந்தியாவிலுள்ள 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்த்தேக்க தொட்டிகள்
- 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
- ரூ.500 கோடியில் 5000 நீர் நிலைகள் புனரமைக்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டின் முதன்மை நதிகள் புனரமைக்க பசுமைவழிப் பயணம் தொடங்க உள்ளது.
புதுமைப் பெண் திட்டம்
- அரசு பள்ளி மாணவிகளுக்குகான புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
காலை உணவுத் திட்டம்
- 1-5 வரையிலான அரசு பள்ளி மாணக்கர்களுக்குகான காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணக்கர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- காலை உணவுத் திட்டம் – 15.09.2022
மகளிர் சுய உதவிக்குழு
- 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட உள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் ரூ.35,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்
- பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன.
தோழி விடுதிகள்
- பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் புதிதாக தொடங்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு பயிற்சி மையம்
- தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு ஆறு மாத காலத்திற்கு மத்திய அரசின் ரயில்வே, வங்கித் தேர்வுக்காக தங்கும் வசதியுடன் 1000 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- இப்பயிற்சி மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் தொடங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல்சார் நீர் விளையாட்டு மையம்
- இந்தியாவில் முதன்முறையாக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியானது தமிழ்நாடு கடல்சார் நீர் விளையாட்டு மையம் இராமநாதபுரம், பிரப்பன்வலசையில் தொடங்கப்பட உள்ளது.
சிப்காட் தொழிற் பூங்கா
- ரூ.120 கோடி செலவில் தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ஸ்டாட் அப் மாநாடு
- தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டாட் அப் மாநாடு (உலகப் புத்தொழில் மாநாடு) நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள்
- தமிழகத்தில் 500 புதிய மின் பேருந்துகளும், 3,000 புதிய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளது.
கலைஞர் பன்னாட்டு அரங்கம்
- கிழக்குக் கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் ரூ.3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
மொழி வளங்கள்
- பழங்குடியினர் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் மையம்
- கோவையில் கலைஞர் கருணாநிதி பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட உள்ளது.
கல்வி செலவு
- மூன்றாம் பாலினத்தவர் உயர்கல்வி படிப்பிற்கான உயர்கல்வி செலவை அரசே ஏற்க உள்ளது.
பசுமை ஆற்றல் மின் உற்பத்தி
- 2,570 மெகாவாட் பசுமை ஆற்றல் மின் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீரேற்று புனல் மின் நிலையங்கள்
- ரூ.60,000 கோடி செலவில் 12 நீரேற்று புனல் மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
தொல்குடி திட்டம்
- ரூ.1,000 கோடி செலவில் பழங்குடியினரின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக தொல்குடி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
- அம்பேத்தர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – 27.06.2023
நீர் வளத் தகவல் & மேலாண்மை அமைப்பு
- நீர் வளங்களை மேலாண்மை செய்யவும், பாதுகாக்கவும் ரூ.30 கோடி செலவில் நீர் வளத் தகவல் & மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட உள்ளது.
தொல்லியல் துறை
- தமிழக தொல்லியல் துறைக்கு 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம்
- ரூ.17 கோடியில் கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவு திட்ட மதிப்பீடு
- மொத்த வருவாய் வரவு ரூ.2,99,010 கோடியாக உள்ளது.
- மொத்த வருவாய் செலவீனங்கள் ரூ.3,48,289 கோடியாக உள்ளது.
- வருவாய் பற்றாக்குறை ரூ.49,279 கோடியாக உள்ளது.
- ரூ.1.55 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது.
|