Daily Current Affairs
Here we have updated 20th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெயர் மாற்றம்
- டிடி பொதிகை சேனலின் பெயர் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1975-ல் தூர்தர்ஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்டு 2000 டிடி பொதிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- தற்போது டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாடு
- சென்னை நந்தனத்தில் கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாடானது நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை (15.07.2023)
- கலைஞர் நூற்றாண்டு பூங்கா – சென்னை
- கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரை
- கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை – கிண்டி
உளி ஓவியங்கள்
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடியிடம் உளி ஓவியங்கள் என்ற நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
- உளி ஓவியங்கள் என்ற நூலினை ரத்தின பாஸ்கர் எழுதியுள்ளார்.
கர்நாடகா
- பெங்களூரு (கர்நாடகா) தேவனஹள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போயிங் உலகளாவிய பொறியியில் மற்றும் தொழில் நுட்ப வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
கிராபென் மையம்
- இந்தியாவின் முதல் கிராபென் மையம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
கொலீஜியம் பரிந்துரை
- உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான பிரசன்னா பி.வரால்-ஐ கொலிஜீயம் குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
எஃகு கசடு தேசிய நெடுஞ்சாலை
- மும்பை-கோவா இடையேயான NH66 என்ற தேசிய நெடுஞ்சாலையானது எஃகு கசடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
- இச்சாலையானது இந்தியாவின் முதல் எஃகு கசடு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
ஸ்லிம் (SLIM) ஆய்வு கலம்
- ஜப்பானால் நிலவின் மேற்பரப்பினை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஸ்லிம் விண்கலமானது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 5வது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
Gandhi : A Life in Three Campaigns
- காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய நூலினை எம். ஜே.அக்பர், கே.நட்வர் சிங் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஏர்பஸ் ஏ350 விமானம்
- ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஏர் பஸ் ஏ350 விமான சேவையை தொடங்கியுள்ளது.
- ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் ஏ350 விமானத்தை ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது.
- நாட்டின் முதல் விமான நிறுவனம் – ஏர் இந்தியா
Fertilising the Future
- மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எதிர்காலத்தை உரமாக்குதல் (Fertilising the Future) என்ற நூலினை எழுதியுள்ளார்.
ஃபீடர் கார்பஸ் கிறிஸ்டி டேபிள் டென்னிஸ் போட்டி – அமெரிக்கா
- மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இது அவரின் முதல் சர்வதேச பட்டமாகும்.
January 18 Current Affairs | January 19 Current Affairs