Daily Current Affairs
Here we have updated 20th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நூல் வெளியீடு
- தர்மபுரியில் அமைந்துள்ள பெரும்பாலை அகழாய்வு தளத்தை பற்றிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
விலையுர்ந்த நகரம்
- இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த நகரமாக மும்பை மாறியுள்ளது.
- உலக அளவில் 136வது இடம் பிடித்துள்ளது.
பால் உற்பத்தி
- இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 4.57%ஆக உள்ளது.
அசாம்
- இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் உகந்த தலைமையகத்தை அசாம் மாநிலம் அமைத்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து
- ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு ஆந்திர முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
- 1969-ல் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது 5வது நிதி ஆணையத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீர், அசாம், நாகலாந்து, இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகலாயம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, உத்திரகாண்ட் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- கடைசியாக 2014-ல் தெலுங்கானாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு மாநாடு
- கேரள மாநிலமானது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு மாநாட்டினை நடத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் AI பள்ளி – திருவனந்தபுரம்
- இந்தியாவின் முதல் AI ஆசிரியர் – ஐரிஸ் (திருவனந்தபுரம் – கேரளா)
உயரமான ரயில் பாலம்
- உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீர் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
- இதன் உயரம் – 359 மீ
சித்தேஷ் சகோர்
- சித்தேஷ் சகோர் விவசாயிக்கு பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடியதற்காக ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCCD) நிலவீரன் (Land Hero) என பெயரிடப்பட்டுள்ளது.
தனி ட்ரோன் கிளை
- உக்ரைன் நாடானது ராணுவத்திற்காக தனி ட்ரோன் கிளையை உருவாக்கியுள்ளது.
இறைச்சி அரிசி
- தென்கொரியா நாடானது இறைச்சி அரிசியை (Meaty Rice) உருவாக்கியது
தொடர்புடைய செய்திகள்
- தென்கொரியா நாடானது K-Star எனும் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது.
விராட்கோலி
- இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் – ரன்வீர் சிங்
- 3வது இடம் – ஷாருக்கான்
பிருத்விராஜ் தொண்டைமான்
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஷாட்கன் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் இடம் பிடித்துள்ளார்.