Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th March 2025

Daily Current Affairs 

Here we have updated 20th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உதயம் தளம்

  • 2023-24-ல் உதயம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட MSME தரவரிசை பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு முறையே முதலிரு இடத்தை பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • உதயம் தளம் – 01.07.2020
  • MSME (Micro, Small and Medium Enterprises)  – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

தொழிற்சாலைகள்

  • இந்தியாவில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

  • 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 64.6%த்தினை கொண்டுள்ளது.

சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - John Marshall

  • இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் ஜெனரலாக செயல்பட்ட ஜான் மார்ஷலுக்கு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிலையொன்று திறக்கப்பட்டுள்ளது.
  • சிந்து சமவெளி நாகரிகத்திற்கு வித்திட்டவர்.
  • ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் – சார்லஸ் மேசன் (1826)
  • அம்ரி – அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் (1831)
  • அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் – 1853, 1856, 1875
  • ஆர்.இ.எம். வீலர் – 1940

TIDCO

  • சென்னை அருகில் புதிய நகரம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பட்ஜெட் 2025-26ல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • இந்நகர் 2000 ஏக்கரில் அமைய உள்ளது.
  • இதற்கான திட்டத்தினை TIDCO அமைப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • TIDCO – (Tamil Nadu Industrial Development Corporation Limited) – தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்
  • தொடங்கப்பட் ஆண்டு – 21.05.1965

ஹைட்ரஜன் ரயில்

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே அறிமுகம் செய்யப்படஉள்ளது.
  • அறிமுகம் செய்யப்பட உள்ள நாள்: 31.03.2025
  • 2030ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை நோக்கமாக கொண்டு ஹைட்ரஜன் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஹைட்ரஜன் ரெயில் உள்ள நாடுகள் – இங்கிலாந்து, சீனா, ஜெர்மெனி

கர்நாடகா

  • தீக்காயம்பட்டோருக்கான கொள்கையை கர்நாடாக மாநிலம் கொண்டு வந்துள்ளது.

தரவரிசை

  • பேச்சு சுதந்திரத்தின் எதிர்காலம் குறித்த கணக்கெடுப்பு 33 நாடுகள் இடையே “உலகில் யார் பேச்சு சுதந்திரத்தினை ஆதரிக்கிறார்கள்?” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
  • இக்கணக்கெடுப்பில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா 24வது இடம் பிடித்துள்ளது.

விஷன் 2020

  • விஷன் 2020-யின் இந்தியாவின் நல்லெண்ண தூதராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) – மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day) – மார்ச் 20

உலக வாய்வழி சுகாதார தினம் (World Oral Health Day) – மார்ச் 20

Related Links

Leave a Comment