Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th September 2023

Daily Current Affairs

Here we have updated 20th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கவிஞர் தமிழ்ஒளி (Special Conference on Tamil Ancient History)

Vetri Study Center Current Affairs - tamil ozhi

  • கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தஞ்சை பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் மார்பளவு சிலை அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • செப்டம்பர் 29-ல் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது.
  • இவ்விழாவில் தமிழ் ஒளி பெயரில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
  • இவரது பெயரில் ரூ.50லட்சம் வைப்புத் தொகையாக வைக்கபட உள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

Vetri Study Center Current Affairs - Women Reservation Bill

  • நாரிசக்தி வந்தன் அதினியம் (மகளிருக்கு அதிகாரமளித்தல் சட்டம்) என்ற பெயரில் மகளிருக்கு சட்டபேரவை, மாநிலங்களவை, மக்களவையில் இட ஒதுக்கீட்டினை 33%-மாக அதிகரிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
  • இது அரசமைப்பு சட்டத்தின் 128வது திருத்த மசோதாவாகும்.
  • ஒப்புதல் அளிக்கப்படும் வேளையில் மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 32லிருந்து 181 அதிரிக்க உள்ளது.

சம்விதான சதன் (Samvidhan)

Vetri Study Center Current Affairs - samvidhan

  • இந்தியாவின் பழைய நாடாளுமன்றத்திற்கு சம்விதான சதன் (அரசியல் நிர்ணய சபை) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • புதிய நாடாளுமன்றம் இந்திய நாட்டின் நாடாளுமன்றம் என்ற அறிவிப்போடு செயல்படத் தொடங்கியுள்ளது.

செவாலியர் விருது (Sevaliya Award)

Vetri Study Center Current Affairs - Rahul Mishra

  • ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் என்னும் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் & டெஸ் லெட்டர்ஸ் (Knight of the Order of Arts & Des Letters) விருதானது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தில்லியில் சர்வேதேச நோயாளிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு சஃகுஷால் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – பிரேசில்

Vetri Study Center Current Affairs - Nischal

  • மகளிர் 50மீ ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்பிரிவில் நிஷால் (இந்தியா) வெள்ளி வென்றுள்ளார்.
  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பதக்கங்கள்  (1 தங்கம், 1 வெள்ளி) பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மகளிர் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் (இந்தியா) தங்கம் வென்றுள்ளார்

இந்தியன் இரயில்வே பாதுகாப்பு படை தினம் (RPF)

Vetri Study Center Current Affairs - RPF copy

  • 1872-ல் பாதுகாப்பு படையாக உருவாக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையானது உருவாக்கப்பட்டது.
  • 1985 செப்டம்பர் 20-ல்ரயில்வே பாதுகாப்பு படையாக உருவாக்கப்பட்டதன் நினைவாக இந்தியன் இரயில்வே பாதுகாப்பு படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • RPF – Railway Protection Force
  • தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது.
  • ரெயில்வே படையின் இயக்குநராக மனோஜன் யாதவா செயல்படுகிறார்.

September 18 Current Affairs | September 19 Current Affairs

Leave a Comment