Daily Current Affairs
Here we have updated 20th to 28th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மின் உற்பத்தி
- கடந்த மார்ச் 31, 2025 நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 42,772MW ஆக உள்ளது.
கோயம்புத்தூர்
- டிட்கோவின் (TIDCO) பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா கோயம்புத்தூரின் வரப்பட்டியில் அமைய உள்ளது.
- TIDCO (Tamil Nadu Industrial Development Corporation) தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் – 21 மே 1965
சட்டத்திருத்தம்
- அண்மையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதன்படி தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதவித்தொகை
- HIV நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய தொகுப்புகள்
சமீபத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள புதிய தொகுப்புகள்
- தென்னை நார்த் தொகுப்பு – பேராவூரணியிலும் (தஞ்சாவூர்)
- நகைத்தொகுப்பு – ராமநாதபுரம்
- எம்பிராய்டரி தொகுப்பு – தென்காசி
புதிய கல்வெட்டு
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மயிலிடைபட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ஊரணி (குளம்) அமைப்பதற்கான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்
- முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் ஒரு புதிய பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் தொடங்கப்பட உள்ளது.
உற்பத்தி தடை
- தமிழ்நாட்டில் மயோனஸ் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச்சட்டம் 2006-ன் பிரிவு 30(2(a) கீழ் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் வெளியீடு
- தமிழகத்தின் நிதித்துறை சார்பாக தமிழர்களின் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும் என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
கிளிப்பர் மிஷன்
- கடந்த 2023-ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது வியாழனின் துணைக்கோளான யூரோபாவில் வேறு கிரக உயிர்களை கண்டறிய கிளிப்பர் மிஷன் என்ற திட்டத்தினை தொடங்கியது.
- இத்திட்டத்தின் கீழ் 2030-ல் வியாழனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
- யூரோபா – வியாழனின் பனிக்கட்டி நிலவு
விதி 142
- விதி 142-ன் கீழ் உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தினை பயன்படுத்தி நிலுவையிலுள்ள எந்த வழக்கிலும் நீதி வழங்கலாம் அல்லது ஆணை பிறப்பிக்கலாம்.
- இந்த அதிகாரத்தினை உயர்நீதிமன்றம் பயன்படுத்த இயலாது.
உலக வானிலை மையம்
- இந்தியா வெப்ப அலைகளால் அதிக பாதிக்கப்படுவதால் இயற்கை பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியாவை உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.
- நேபாளம், எத்தியோப்பியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
விண்வெளிக்கு செல்லுதல்
- இந்திய விண்வெளி வீரரான சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளார்.
- ஆக்ஸியம்-4 திட்டதின் கீழ் செல்ல உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்கள்
- பிரசாந்த் பாலகிருஷ்ணன்
- அஜித் கிருஷ்ணன்
- சுபன்ஷு சுக்லா
- அங்கத் பிரதாப்
விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர்கள்
- ராகேஷ் சர்மா (1984)
- கோபி தோட்டகுரா (2024)
விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனைகள்
- கல்பனா சால்வா (1997)
- சுனிதா வில்லியம்ஸ் – (2021-ல் அதிக நேரம் விண்வெளி நடந்துள்ளார்)
ஏ.எஸ்.துலாத்
- ஏ.எஸ்.துலாத் என்பவரால் The Chief Minister and the Spy என்ற நூலினை எழுதியுள்ளார்.
மேக வெடிப்பு
- சமீபத்தில் மேகவெடிப்பு மூலம் ஜம்மு & காஷ்மீரில் மழை பெய்துள்ளது.
- மேகவெடிப்பு என்பது 20-30 ச.கி.மீ பரப்பளவு கொண்ட புவியியல் பகுதியில் மணிக்கு 10 செ.மீ (100 மி.மீ) அளவில் எதிர்பாராமல் மழை பெய்வதை குறிக்கிறது.
துணை வேந்தர்
- அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக நைமா கதூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் இவராவார்.
சிறுத்தைகள்
- போட்ஸ்வானா என்ற ஆப்பிரிக்க நாட்டின் 8 சிறுத்தைகள் மத்தியப்பிரதேசத்தின் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்திற்கு வரவைக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சிறுத்தைகள் திட்டம் – 17.09.2022
- நபீபியா (8 சிறுத்தைகள்), தென்னாப்பிரிக்கா (12 சிறுத்தைகள்) போன்ற நாடுகளிலிருந்து மத்திய குனோ தேசிய பூங்காவிற்கு வரவைக்கப்பட்டது.
சரக்கு போக்குவரத்து பூங்கா
- அசாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில் சர்வதேச சரக்கு பூங்கா நிறுவப்பட உள்ளது.
- இது இந்தியாவின் முதல் சர்வதேச சரக்கு போக்குவரத்து பூங்காவாகும்.
குறைந்தபட்ச வயது
- ஒருவர் வங்கிக் கணக்கைத் திறக்க குறைந்தபட்ச வயது 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த வயது குறைப்பு ரிசர்வ் வங்கியின் விதி முறைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லாரியஸ் விருதுகள்
- ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் – நோவக் ஜோகோவிச்
- ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை – அய்ட்னா பொன்மடி
முக்கிய தினம்
இந்தியா குடிமை பணிகள் தினம் – ஏப்ரல் 21
உலக பூமி தினம் – ஏப்ரல் 22
உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் – ஏப்ரல் 23
தேசிய பஞ்சாயத்து தினம் – ஏப்ரல் 24
உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
அறிவு சார் சொத்து குறியீடு தினம் – ஏப்ரல் 26