Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st February 2023

Daily Current Affairs

Here we have updated 21st February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • ராமேசுவரம்-காசி ஆன்மீக பயண திட்டத்தினை தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார்.
    • 60 முதல் 70 வயது வரை உள்ள இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
    • மானசவேரி, முக்திநாத் ஆகிய தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்பவருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.
  • ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது மாநிலங்களவையின் முன்னாள் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.

தேசிய செய்தி

  • இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றன.
    • கொல்கத்தாவில் இந்திய நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவ கூட்டமைப்பு மாநாடு மூலமாக தெரிய வந்துள்ளது.
    • 7% பெண்கள், 6% ஆண்கள் மட்டுமே முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்கின்றன.
    • உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17
  • 2025-ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்த நோயை 25% குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்தாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • நாகலாந்தின் 21வது ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுள்ளார்.
    • குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதி சொங்குப்சங் செர்டோ பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
    • 2021 ஆகஸ்ட் மாதம் முதல் மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
    • 2022-ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்த போது மேற்கு வங்காள ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பி.வி.ஆர்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது பதவி வகித்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிதி ஆயோக் தலைவராக பி.வி.ஆர்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குஜராத்தின் மோர்பி பால விபத்திற்கு சேதமடைந்த கம்பி வடங்கள் காரணம் என தெரிய வந்துள்ளது.
    • மோர்பி பாலம்குஜராத் மாநிலம் மோர்பி நகரத்தின் மச்சு நதிக்கு குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது.
  • 2023-ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சன்செத் ரத்னா” விருது 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • கதிர் குப்தா –  மத்திய பிரதேசம்
    • பித்யுத் பரமன் மஹதோ – ஜார்க்கண்ட்
    • சுகந்தா மஜும்தார் – மேற்கு வங்கம்
    • ஹீனா விஜயகுமார் கேவிட் – மகாராஷ்டிரம்
    • அதிர் ரஞ்சன் செளத்ரி – மேற்குவங்கம்
    • குல்திப் ராய் சர்மா – அந்தமான் நிக்கோபார் தீவுகள்
    • அமாேல் ராம்சிங் கோல்ஹே – மகாராஷ்டிரம்
    • ஜான் பிரிட்டாஸ் – கேரளம்
    • மனோஜ் குமார் ஜா – பீகார்
    • ஏஃப்டி அகமது கான் – மகாராஷ்டிரம்
    • விஷம்பர் பிரசாத் நிஷாத் – உத்திர பிரதேசம்
    • சாயா வர்மா – சத்தீஸ்கர்
  • அகமதாபாத்-மும்பை இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை 2026-ல் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2051-ல் இத் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ளது
    • 508 கி.மீ. தூரத்திற்கு ரூ1.08 லட்சம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • புல்லட் ரயில் 260கி.மீ. முதல் அதிகபட்சமாக 320 வேகம்-தில் செல்கிறது.
    • ஜப்பானின் ஷின்கான்சென் தொழில் நுட்பத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
    • தற்போது 170 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் இரயில் இயங்கி வருகிறது.
    • தேசிய அதிவேக ரயில் கழக நிறுவனம் – 2016-ல் தொடங்கப்பட்டுள்ளது.
  • பிப்ரவரி 22 முதல் 25 வரை பெங்களூரில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
  • உத்தராகண்டில் இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறும் வகையில் அதிக முதலீடு செய்யப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • மத்திய அரசின் முத்திரா திட்டதின் கீழ் 38கோடி முத்திரா கடன்கள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன.
    • முத்திரா திட்டம் – 08.04.2015

உலகச் செய்தி

  • சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் நடுப்பகுதியில் 19 ச.கி.மீ பரப்பளவில் 400மீட்டர் “தி முகாப்” என்ற பெயரில் ஒரு மெகா கட்டிடம் உருவாக்கப்பட உள்ளது.
    • இப்பணி 2023-ல் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஏற்கனவே 100 மைல் நீள “ஸ்கை ஸ்கிராப்பர்” திட்டம் 2022-ல் அறிவித்து செயல்படுத்தபட்டு வருகிறது

விளையாட்டு செய்தி

  • எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
    • 10மீ ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் நர்மா நிதின் மற்றம் ருத்ராங்க் பாட்டில் இணையும், 10மீ எர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வருண்தோமர் மற்றும் ரிதம் சங்வான் இணையும் தங்கம் வென்றுள்ளன.
    • 10மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வருண்தோமர் வெணகலம் வென்றுள்ளார்
  • அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 6-3, 7-5 என்ற செட்களில் கேமரூன் நோரியை (பிரிட்டன்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

முக்கிய தினம்

  • உலக தாய்மொழி தினம் – பிப் 21
    • கருப்பொருள் : Multilingual Education – a Necessity to transform Education

Feb 18 Current Affairs  |  Feb 19-20 Current Affairs

Leave a Comment