Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st March 2023

Daily Current Affairs

Here we have updated 21st March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ல் தொடங்கப்படும் என்று (2023-24) நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ல் (15.09.2023) தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
    • அண்ணாவின் பிறந்த நாள் அன்று தான் காலை உணவுத் திட்டம் (15.09.2022) தொடங்கப்பட்டது.
  • தமிழகம் முழுவதும் உள்ள 30,122 தொடக்க பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • ஏற்கனவே இத்திட்டம் 1,937 தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • காலை உணவுத் திட்டம் – 15.09.2022
  • ஆதிதிராவிட மக்களுக்காக ரூ.1,000கோடியில் “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு்த் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வரும் நிதியாண்டிலிருந்து “அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்..
  • சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வட சென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற செயல் திட்டம் ரூ.1,000 கோடியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
  • கடல் மாசுபாட்டைக் குறைத்து, அதன் சூழலைப் பாதுகாப்பதற்காக ரூ.2,000 கோடியில் “தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்” செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுப்பாடைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், இத்திட்டதை உலக வங்கி நிதியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” அமைக்கப்பட உள்ளது.
  • சேலத்தில் ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • “கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம்” ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
    • மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் “எட்டு தளங்களுடன் நவீன வசதி கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
  • சென்னை மியூசிக் அகாதெமியின் நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, நிருத்ய கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா விருது, டிடிகே விருது மற்றும் இசை அறிஞர் விருதுக்கு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டள்ளதாக மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி தெரிவித்துள்ளார்.
    • சங்கீத கலாநிதி விருதுபாம்பே ஜெயஸ்ரீ (கர்நாடக இசைப் பாடகி)
    • நிருத்ய கலாநிதி விருது –  வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி (பரத நாட்டியக் கலைஞர்)
    • சங்கீத கலா ஆச்சார்யா விருது – பால்குளங்கரா அம்பிகா (கேரளம்)
    • சங்கீத கலா ஆச்சார்யா விருது – கே.எஸ்.காளிதாஸ் (மூத்த மிருதங்க வித்துவான்)

தேசிய செய்தி

  • மார்ச் 20-ல் இந்தியா-ஜப்பான் இடையேயான “ஆண்டு மாநாடு” தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி “இந்தியா-ஜப்பான் இடையேயான ராஜீய ரீதியிலான நல்லுறவு இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் “என தெரிவித்துள்ளார்
    • ஜி7 கூட்டமைப்பிற்கு ஜப்பான் தலைமை வகித்து வருகிறது.
    • ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது.
  • பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை எல்விஎம்-. கனரக ராக்கெட் மூலம் வரும் 26-ம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
    • ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையானல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்3) மூலம் மேலும் 36 செயற்கைக் கோள்கள் விண்ணில் எவப்பட உள்ளன.

விளையாட்டுச் செய்தி

  • ஆசிய பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 5-1 என்ற கணக்கில் பிரிஜேஷ் தமானியை (இந்தியா்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடைப் பந்தயப் போட்டியில் ஆடவருக்கான 20 கி.மீ பிரிவில் இந்தியாவின் அக்ஸ்தீப் சிங் தங்கம் வென்றார்.
    • மகளிர் பிரிவில் (20 கி.மீ.) பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி வெண்கலப் பதக்கம் வென்றார்
  • அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 2வது ரோஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரியில், ரெட் புல் டிரைவரும், மெக்ஸிகோ வீரருமான செர்ஜியோ பெரஸ் முதலிடம் பிடித்தார்.

முக்கிய தினம்

  • உலக காடுகள் தினம் (மார்ச் 21).

Mar 18 Current Affairs  |  Mar 19-20 Current Affairs

Leave a Comment