Daily Current Affairs
Here we have updated 21st November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய இணையதள வசதி
- தமிழகத்தில் நிலஅளவை மேற்கொள்ள இணையதளம் விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதள வசதியினை தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
- இணையதள முகவரி: http://tamilnilam.tn.gov.in/citizen
உலக உணவுத் திருவிழா
- புதுதில்லியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் தமிழ்நாட்டிற்கு விருது வழங்பபட்டுள்ளது.
- பிரதமரின் உணவுப் பதப்படுத்தம் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து விளங்கியமைக்காக விருதானது வழங்கப்பட்டள்ளது.
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழகம்
- இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் அமைந்துள்ளதென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2+2 பேச்சுவார்த்தை
- தில்லியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இந்தோ-பசுபிக் பிராந்திய நலனுக்கான இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிசரட் மார்ல்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜேவியர் மிலேப் (Javier Milei)
- அர்ஜென்டீனா நாட்டின் புதிய அதிபாராக ஜேவியர் மிலேய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டி-இத்தாலி
- நோவக் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இவ்விருதினை 6 முறை வென்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்துள்ளா்
ஆசிய பாரா வில்வித்தை போட்டி – தாய்லாந்து
- காம்பவுண்ட் மகளிர் ஓபன் பிரிவில் சரிதா தேவி வெண்கலம் வென்றுள்ளார்
உலக மீன்பிடி தினம் (World Fisheries Day) – Nov 21
- கருப்பொருள்: Celebrating the Wealth of Fisheries and Aquaculture.
உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) – Nov 21
- கருப்பொருள்: Accessibility
உலக வணக்கம் தினம் (World Hello Day) – Nov 21
- 1973-ல் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் முடிவினை நினைவு கொள்ளும் விதமாக கொண்டாடப்படுகிறது.
November 19 Current Affairs | November 20 Current Affairs