Daily Current Affairs
Here we have updated 21st October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை
- திருவள்ளூவர் மாவட்டம், பெரியபாளையம் ஊத்துக்கோட்டையில் ரூ.200 கோடி செலவில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவுசார் நகரமானது அமைய உள்ளது.
திருப்தி திட்டம்
- உள்நோயாளிகளுடன் இருப்போருக்கு மதிய உணவு வழங்கும் திட்டமான திருப்தி திட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.
- ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு சார்பில் இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- உலக விபத்து காய தினத்தினை (அக்.17) முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இத்திட்டம் துவங்கப்பெற்றுள்ளது.
தோர்தா
- உலக சுற்றுலா அமைப்பானது (UNWTO) குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலிலுள்ள தோர்தா கிராமத்தினை சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்துள்ளது.
அட்டாரி-வாகா எல்லை
- பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அட்டாரி வாகா எல்லையில் நாட்டின் உயரமான தேசியக் கொடியானது 418 அடி உயரத்தில் இயற்றப்பட்டள்ளது.
- இக்கொடியானது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
இரு புயல்கள்
- அரபிக்கடல், வங்கக்கடலில் இரு வேறு புயல்கள் உருவாகியுள்ளன.
- அரபிக்கடலில் உருவான புயலுக்கு தேஜ் (வேகம் எனப் பொருள்) பெயரிடப்பட்டுள்ளது.
- இப்புயலுக்கு இந்தியா இப்பெயரினை பரிந்துரைத்துள்ளது.
- வங்கக்கடலில் உருவான புயலக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டள்ளது.
- இப்பெயரினை ஈரான் நாடானது பரிந்துரைத்துள்ளது.
உத்திரப்பிரதேசம்
- தொலை நிலை மருத்துவ ஆலோசனை மையங்கங்களான டிஜிட்டல் டாக்டர் கிளினிக் (Digital Doctor Clinic) உத்திரபிரதேச கிராமப்புறங்களில் தொடங்கப்பட உள்ளது.
- இதற்காக ரூ.1,000 கோடி செலவில் ஒபுது குழும மருத்துவமனையுடன் உத்திரபிரதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
நமோ பாரத்
- இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையான ரேபிடேக்ஸ் (Regional Rapid Train Service) உத்திரபிரதேசத்தின் சாஹிபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- தில்லி-காஜியாபாத்-மீரட் நகரங்களுக்கு இடையேயான இந்த ரயில் சேவைக்கு நமோ பாரத் எனப் பெயரிடப்பட்டள்ளது.
ஆபரேஷன் சக்ரா-2
- சிபிஐ அதிகாரிகள் ஆபரேஷன் சக்ரா-2 என்ற பெயரில் இணைய வழி நிதி மேசடி வழக்குகள் தொடர்பான 76 இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளன.
- 2022-ல் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து 115 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-1 என்ற பெயரில் சோதனை நடத்தியுள்ளது.
தேசிய காவல்துறை நினைவு தினம் (National Police Commemoration Day) – Oct 21
- 1959-ல் லடாக்கில் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்ட காவல் துறையினரின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ல் தேசிய காவல்துறை தினமானது அனுசரிக்கப்படுகிறது.