Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st September 2024

Daily Current Affairs

Here we have updated 21st September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஜான் மார்ஷல்

Vetri Study Center Current Affairs - John Marshall

  • ஜான் மார்ஷல் The Forgotten Age Reveled என்ற கட்டுரையை எழுதி 100 வருடங்கள் ஆகியுள்ளது.
  • இக்கட்டுரை 20.09.1924-ல் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
  • சிந்துவெளி நாகரிகத்தை விரிவாக ஆய்வு செய்த சர் ஜான் மார்ஷல் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் இந்தியாவின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

வக்பு வாரியம்

  • தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக நவாஸ்கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு வக்பு வாரியம் – 18.01.1958
  • இந்திய வக்பு வாரியம் – 1954

உத்தரகாண்ட்

  • உத்தரகாண்ட் அரசு பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அனிமேஷன் சிறப்பு மையம்

  • தேசிய அனிமேஷன் சிறப்பு மையமானது மும்பையில் (மகாராஷ்டிரா) நிறுவப்பட உள்ளது.

திவ்ய கலா மேளா

  • மாற்றுதிறனாளிகளுக்கான 19வது திவ்ய கலா மேளா விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) தொடங்கியுள்ளது.

அனராக் கர்க்

  • போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் – 1986

குழு அமைப்பு

  • குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு சஞ்சய் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • MSP – Minimum Support Price

இரத்த வகை கண்டுபிடிப்பு

  • சமீபத்தில் மால் என்னும் இரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்மை புரட்சி 2.0

  • கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் வெண்மை புரட்சி 2.0 தொடங்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், ஊட்டசத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு வலிமையை கொடுக்கவும் இப்புரட்சி தொடங்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் விடுப்பு

  • மாதவிடாய் காலங்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கர்நாடகா அரசு சம்பளத்துடன் 6 நாட்கள் விடுப்பு வழங்க சட்டம் கொண்டு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மாதவிடாய் விடுமுறை முறை முதன் முதலில் ரஷ்யாவில் 1917-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மாதவிடாய் காலத்தில் முதன்முதலில் பெண்களுக்கு சிக்கிம் உயர்நீதிமன்றம் விடுமுறை அளித்துள்ளது.
  • ஒடிசாவில் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க பணம் வழங்கப்படுகிறது.
  • 1992-ல் பீகாரில் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
  • கேரளா மாநிலங்களின் கல்லூரி, பல்கலைகழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2029ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

கம்யூனிஸ்ட் அறிக்கை

  • 1929-ஆம் ஆண்டு பெரியார் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
  • கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதியவர் – காரல் மார்க்ஸ்

நாணயம் வெளியீடு

  • போர்ச்சுகல் அரசு கிறிஸ்டியானோ ரொனால்டேபாவுக்கு 7 யூரோ மதிப்புள்ள நாணயத்தை வெளியிட்டுள்ளது.
  • போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனான இவரை கெளரவிக்கும் வகையில் இவரது தலையுடன் அவரது ஜெர்சி எண்ணை குறிக்கும் வகையில் சி.ஆர்.7 என பொறிக்கப்பட்டு வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • 1964-ல் முதல் நாணயம் ஜவஹர்லால் நேருவை பெருமைபடுத்தும் விதமாக ரூ. 1 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
  • 1995-ல் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டிற்காக ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 2022-ல் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ரூ.2,நாணயம் வெளியிடப்பட்டது.
  • உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால்தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிட்ப்பட்டுள்ளது.
நாணயம்தலைவர்ஆண்டு
ரூ.1அம்பேத்கர்1990
ரூ.50சுபாஷ் சந்திர போஸ் (நூற்றாண்டு)1997
ரூ.5காமராஜர் (நூற்றாண்டு)2004
ரூ.5அறிஞர் அண்ணா (நூற்றாண்டு)2009
ரூ.5எம்.ஜி.ஆர் (நூற்றாண்டு)2019
ரூ.100கலைஞர் (நூற்றாண்டு)2024
  • அறிஞர் அண்ணா நினைவு நாணயத்தில் அவரின் பெயர் அண்ணாதுரை என்ற கையெழுத்து இடம் பெற்றுள்ளது.
  • கலைஞர் நினைவு நாணயத்தில் அவரின் பெயர் தமிழ் வெல்லும் என்ற சொற்களும் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷ் காஷ்யப்

Vetri Study Center Current Affairs - Santosh Kashyap

  • இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சந்தோஷ் காஷ்யப் நியமனம் செய்யப்ட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் – கவுதம் காம்பீர்
  • இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் பயிற்சியாளர் – மோர்னே மோர்கல்

முக்கிய தினம்

சர்வதேச சிவப்பு பாண்டா தினம் (International Red Panda Day) – செப்டம்பர் 21

உலக அமைதி தினம் (World Day of Peace) – செப்டம்பர் 21

உலக அல்சைமர் தினம் (World Alzheimer’s Day) – செப்டம்பர் 21

சர்வதேச கடலோர தூய்மை தினம் (International Coastal Cleanup Day) – செப்டம்பர் 21

Related Links

Leave a Comment